Connect with us

Cricket

அடுத்தடுத்து 3 சூப்பர் ஓவர்கள்.. டி20-யில் புது உலக சாதனை

Published

on

இந்தியாவில் நடைபெற்று வரும் மகாராஜா டி20 கோப்பை கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை அரங்கேறியது. இந்த தொடரில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் மற்றும் ஹூப்ளி டைகர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக மூன்று சூப்பர் ஓவர்கள் வீசப்பட்டன.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஹூப்ளி டைகர்ஸ் அணி 164 ரன்களை குவித்தது. 165 ரன்களை துரத்திய ஹூப்ளி பிளாஸ்டர்ஸ் அணிக்கு கேப்டன் மயங்க் அகர்வால் மட்டும் அரைசதம் அடித்தார். மற்ற வீரர்கள் ரன் அடிக்க முடியாமல் திணறினர். எனினும், இந்த அணி போட்டியை சமன் செய்துவிட்டது. முதல் முறை போட்டி சமனில் முடிந்ததை அடுத்து சூப்பர் ஓவர் கொண்டுவரப்பட்டது.

சூப்பர் ஓவரில் பேட்டிங் ஆட களமிறங்கிய மயங்க் அகர்வால் கோல்டன் டக் ஆகி வெளியேறினார். அவரது பிளாஸ்டர்ஸ் அணி 10 ரன்களை குவித்தது. இதை துரத்திய ஹூப்ளி டைகர்ஸ் அணிக்கு கேப்டன் மனிஷ் பாண்டே இக்கட்டான சூழ்நிலையில் சிக்சர் விளாச, முதலாவது சூப்பர் ஓவர் சமனில் முடிந்தது. இரு அணிகளுக்கும் முடிவு கிடைக்கவில்லை. இதனால் இரண்டாவது சூப்பர் ஓவர் கொண்டுவரப்பட்டது.

இதிலும் இரு அணிகள் சமமாக 8 ரன்களை அடித்தன. இரண்டாவது சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது. இதன் காரணமாக டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல்முறையாக மூன்றாவது முறை சூப்பர் ஓவர் கொண்டுவரப்பட்டது. மூன்றாவது சூப்பர் ஓவரில் மன்வந்த் குமார் இரண்டு பவுண்டரிகளை விளாசினார். இதனால் ஹூப்ளி டைகர்ஸ் அணி 13 ரன்கள் எனும் இலக்கை துரத்தி வெற்றி பெற்றது.

google news