Cricket
33 வயதில் அறிமுகம்.. முதல் மேட்சிலேயே அசத்திய கேரள வீராங்கனை!
தென்னாப்பிரிக்க பெண்கள் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் அறிமுக வீராங்கனையாகக் களமிறங்கிய ஆஷா ஷோபனா 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி, ஒரு கட்டத்தில் 99/5 என்று தடுமாறியது. ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிர்தி மந்தனா ஒருநாள் போட்டிகளில் தனது ஆறாவது சதத்தைப் பதிவு செய்தார். 127 பந்துகளில் 117 ரன்கள் எடுத்தார் அவர். இதன்மூலம் இந்திய அணி 265 ரன்கள் குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி, தொடர்ச்சியான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக, 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான கேரள வீராங்கனை ஆஷா ஷோபனா, 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், முதல்முறையாக தென்னாப்பிரிக்க தொடரில் இந்திய அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
தென்னாப்பிரிக்க மகளிர் அணி 122 ரன்களில் ஆட்டமிழக்கவே, இந்திய மகளிர் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இவ்விரு அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இதே பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் வரும் 19-ம் தேதி நடக்கிறது.
இதையும் படிங்க: இது முதல்முறையல்ல… சர்ச்சை நாயகன் தர்ஷன் மைசூரு சர்ச்சைகள்!