அமெரிக்காவில் தொடர்ச்சியாக விறு விறுப்பாக நடைபெற்று வந்த மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சியாட்டல் ஆர்கஸ் அணியும் எம்.ஐ நியூயார்க் அணியும் மோதியது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சியாட்டல் அணி மொத்தமாக 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தனர்.
அதனை தொடர்ந்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய எம்.ஐ. நியூயார்க் அணி 16 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் எம்.ஐ. நியூயார்க் அணி வெற்றிபெற்றது எந்த அளவிற்கு பேசப்படுகிறதோ அளவிற்கு நிக்கோலஸ் பூரன் பேட்டிங்கும் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.
ஏனென்றால், நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் நிக்கோலஸ் பூரன் அருமையாக விளையாடி 55 பந்துகளில் 137 ரன்கள் எடுத்தார் மொத்தமாக 13 சிக்ஸர்கள் 10 பவுண்டரி என மைதானத்தில் வான வேடிக்கை காட்டினார் என்று கூறலாம். அவருடைய ஆட்டம் மும்பை அணி ரசிகர்கள் மட்டுமின்றி எதிரணியின் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. அவர் சிக்ஸர்கள் அடித்த வீடியோ கோலம் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
மேலும், நேற்று எம்.ஐ. நியூயார்க் அணி வெற்றி பெற்றதன் மூலமாக மொத்தமாக எம்.ஐ. நியூயார்க் அணி 9 முறை சாம்பினாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் ஆகியுள்ளது. இந்த எம்.ஐ. நியூயார்க் அணிக்கு கேப்டனாக கிரண் பொல்லார்ட் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…