துலீப் கோப்பை 2024-25 தொடருக்கான அணிகள் விவரங்களை கடந்த வாரம் பிசிசிஐ வெளியிட்டது. இந்த தொடரில் நான்கு அணிகள் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், ரிஷப் பண்ட் பி டீமில் இடம்பிடித்துள்ளார். இதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக அந்த அணிக்கு கேப்டன் பொறுப்பு ரிஷப் பண்ட்-க்கு வழங்கப்படவில்லை. மாறாக டீம் பி-யின் கேப்டன் பொறுப்பை அபிமன்யூ ஈஸ்வரனுக்கு பிசிசிஐ வழங்கி இருக்கிறது.
இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பிசிசிஐ முடிவு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய டெஸ்ட் அணியில் ரோகித் சர்மாவுக்கு அடுத்த நிலையில், கேப்டன் பொறுப்பை ஏற்க தகுதியான நபராக பார்க்கப்பட்டவர் ரிஷப் பண்ட் ஆனால் துலீப் கோப்பை தொடரில் அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படவில்லை என்று ஆதங்கம் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, “ரிஷப் பண்ட் கேப்டன் இல்லை. அவர் அபிமன்யூ ஈஸ்வரன் அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர் அபிமன்யூ ஈஸ்வரன் கேப்டன்சியில் விளையாட இருக்கிறார், இதில் எந்த தவறும் இல்லை. எனினும், டெஸ்ட் கேப்டன்சி பொறுப்பிற்கு கூட ரிஷப் பண்ட் தகுதியானவர் இல்லையா? எனக்கு இது ஆச்சரியமாக இருக்கிறது.”
“இந்த விஷயத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட்-ஐ தான் நீங்கள் பார்த்தீர்கள். இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா என மூன்று நாடுகளில் சதம் விளாசிய ஒரே விக்கெட் கீப்பர் இவர் தான். இவர் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் விதம், அவர் ஸ்கோர் செய்யும் விதம், என்னை பொருத்தவரை இவர் தான் கேப்டனாக இருக்க முடியும்.”
“ஆனால், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயஸ் அய்யர் மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் கூட கேப்டனாக செயல்படுகிறார், ஆனால் பண்ட் கேப்டன் இல்லை. இதை என்னால் ஏற்க முடியவில்லை. புதிய தலைமை உருவாகி இருக்கிறது. இதனால், ரிஷப் பண்ட்-க்கு கேப்டன் பதவி வழங்காதது குறித்து கவுதம் கம்பீர் என்ன சொல்வார் என்பதை அறிந்து கொள்ள ஆவலாக காத்திருக்கிறேன்,” என்று தெரிவித்தார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…