Cricket
என்னை நம்பியவர்களுக்கு நன்றி – அபிஷேக் ஷர்மா
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் அபிஷேக் ஷர்மா 47 பந்துகளில் சதம் விளாசினார். இந்திய அணிக்காக அவர் களமிறங்கிய 2-வது டி20 போட்டியில் சதம் அடித்த அபிஷேக் ஷர்மா தனது பயிற்சியாளர் மற்றும் கேப்டனுக்கு நன்றி தெரிவித்தார்.
நேற்றைய போட்டியில் துவக்க வீரர் அபிஷேக் ஷர்மா சதம் அடித்ததால், இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 234 ரன்களை குவிக்க முடிந்தது. இதைத் தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணி 18.4 ஓவர்களில் 134 ரன்களை மட்டுமே அடித்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 134 ரன்களில் வெற்றி பெற்று அசத்தியது.
இந்திய அணிக்காக களமிறங்கிய 2-வது போட்டியில் சதம் அடித்த அபிஷேக் ஷர்மா, “இது உனக்கான நாள் என்ற போது, நீங்கள் உங்களை வெளிப்படுத்துவீர்கள். எனது கேட்ச் தவறவிடப்பட்டதும், நான் அப்படித் தான் நினைத்துக் கொண்டு பொறுப்பேற்றேன். ருதுராஜ் எனக்கு துணையாக இருந்தார். எனது திறமை மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. என்னை பொருத்தவரை அந்த தருணம் தான் முக்கியம்.”
“நேற்றைய போட்டி முடிந்த விதம் அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். அதிக வருத்தம் கொள்ள எங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. டி20-யை பொருத்தவரை அந்த தருணம் தானஅ மிகமுக்கியம். மேலும், இந்த நாள் என்னுடையது என்று உணர்ந்தேன். என் மீது நம்பிக்கை வை்த பயிற்சியாளர்கள், கேப்டன் ஆகியோருக்கு நன்றி,” என்று தெரிவித்தார்.