Categories: Cricket

T20 World Cup: வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்… த்ரில்லரில் ஜெயித்து அரையிறுதிக்கு முன்னேற்றம்!

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றின் பரபரப்பான போட்டியில் வங்கதேசத்தை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.

குரூப் 2-வில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் குரூப் 1-ல் இந்தியா என மூன்று அணிகள் அரையிறுதிக்குத் தகுதிபெற்றிருந்த நிலையில், நான்காவது அணியை முடிவு செய்யும் முக்கியமான சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டி ஆப்கானிஸ்தான் – வங்கதேசம் இடையே நடைபெற்றது.

முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான், அதிரடி காட்டாமல் பொறுமையாகவே விளையாடத் தொடங்கியது. 11-வது ஓவரில் இப்ராஹிம் ஜர்தான் விக்கெட்டை இழந்தபோது 59 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 16 மற்றும் 17-வது ஓவர்களில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தபோது 88 ரன் மட்டுமே எடுத்திருந்தது. இறுதியில் கேப்டன் ரஷித் 10 பந்துகளில் 19 ரன்கள் எடுக்க 115 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

குரூப் 2-வில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியா என மூன்று அணிகளுக்குமே அரையிறுதி வாய்ப்பை இந்த மேட்ச் திறந்துவிட்டது. ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த இலக்கை 12.1 ஓவர்களில் சேஸ் செய்தால் வங்கதேச அணியும், வெற்றி அல்லது போட்டி கைவிடப்பட்டால் ஆப்கானிஸ்தான் அணியும் அரையிறுதிக்கு முன்னேறும் என்ற நிலை. அதேபோல், ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தால் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறும்.

இப்படியான சூழ்நிலையில் சேஸிங்கைத் தொடங்கிய வங்கதேசம் பவர்பிளேவில் 3 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்கள் எடுத்தது. ஏழாவது ஓவரில் சௌம்யா சர்க்காரையும், 11- வது ஓவரில் அடுத்தடுத்து மகமதுல்லா மற்றும் ரிஷாத் விக்கெட்டுகளையும் எடுத்து கேப்டன் ரஷீத் கான் ஆப்கானிஸ்தானுக்கு நம்பிக்கை கொடுத்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் அரைசதமடித்து வங்கதேசத்துக்கு நம்பிக்கை கொடுத்தார் தொடக்க வீரர் லிட்டன் தாஸ்.

மழையால் போட்டி 19 ஓவராகக் குறைக்கப்பட்டதோடு இலக்கும் 114 ஆக மாற்றியமைக்கப்பட்டது. வங்கதேச அணிக்கு 9-வது மற்றும் 10-வது வீர்களாகக் களமிறங்கிய டன்சிம் மற்றும் டஸ்கின் அகமது ஆகியோர் சிறிதுநேரம் நிலைத்து நின்றாலும் வெற்றிக்கு அது போதுமானதாக இல்லை.

கடைசி 2 ஓவர்களில் 12 ரன்கள் தேவை என்கிற நிலையில் 18-வது ஓவரை நவீன் உல்ஹக் வீசினார். அடுத்தடுத்த பந்துகளில் டஸ்கின் அகமது மற்றும் முஸ்தாபிசூர் ரஹ்மான் விக்கெட்டுகளை வீழ்த்தி நவீன் உல்ஹக் ஆப்கானிஸ்தான் அணியை வெற்றிபெற வைத்தார். இதன்மூலம், 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் முதல்முறையாக அரையிறுதிக்குத் தகுதிபெற்றது. ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்குத் தகுதிபெறாமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: என்னது ஆளுநர் ரவி அப்படிச் சொன்னாரா… காட்டமாக மறுப்புத் தெரிவித்த ஆளுநர் மாளிகை!

AKHILAN

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago