அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது.
இந்த போட்டியை தொடர்ந்து பேசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இவர்களது வரிசையில், தற்போது இந்திய அணியின் ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் ரவீந்திர ஜடேஜா எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்திய வெற்றிக்கு அவர் அதிக பங்களிப்பை வழங்கவில்லை. இந்த நிலையில், தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் தளத்தில் ரவீந்திர ஜடேஜா உணர்ச்சிகர பதிவை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், “மனம் நிறைந்த நன்றியுடன், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன். உறுதியான குதிரை பெருமையுடன் துள்ளிக் குதிப்பதைப் போல, நான் எப்போதும் என் நாட்டிற்காக என்னால் முடிந்ததைச் செய்து வருகிறேன். மற்ற வகை கிரிக்கெட்டில் இதைத் தொடர்ந்து செய்வேன்.”
“டி20 உலகக் கோப்பையை வெல்வது ஒரு கனவு நனவான தருணம் ஆகும், இது எனது டி20 சர்வதேச வாழ்க்கையின் உச்சம். மறக்க முடியாத நினைவுகளுக்கும், வாழ்த்துகளுக்கும், தளராத ஆதரவுக்கும் நன்றி. ஜெய் ஹிந்த் ரவீந்திரசிங் ஜடேஜா,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…