கிரிக்கெட்டில் அனைத்துவித போட்டிகளிலும் விளையாடக்கூடிய வீரர்கள் கொண்ட இந்திய அணி ஒருசமயத்தில் இருந்தது. அந்த அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா பிரதானமாக இருந்தனர். இந்த குழுவில் இடம்பெற்று இருந்த கேஎல் ராகுல் இந்த ஆண்டு துவக்கத்தில் இந்திய டி20 அணியில் இடம்பிடிக்க தவறினார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு ஏற்றவாரு சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக் கொள்ள தவறிய கே.எல். ராகுல் ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் மீண்டும் சேர்க்கப்பட்டார். இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சேர்க்கப்பட்டு இருக்கும் கேஎல் ராகுல் ரிஷப் பண்ட்-க்கு பேக்கப் வீரராகவே செயல்படுவார் என்று கூறப்படுகிறது.
உலகக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் பத்து இன்னிங்ஸில் 452 ரன்களை விளாசினார். இதில் ஒரு சதம், இரண்டு அரைசதங்கள் அடங்கும். இவற்றை ஐந்தாவது வீரராக களமிறங்கி அடித்தார். தற்போது இந்த இடத்தில் விளையாடுவதற்கு ரிஷப் பண்ட் அணியில் திரும்பியதால், கேஎல் ராகுல் அணியில் இடம்பிடிக்க முடியாமல் உள்ளார்.
கடந்த 2022 டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாடி வருகிறார். இவர் தற்போது இலங்கை அணிக்கு எதிராக ஆகஸ்ட் 3 ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை நடைபெற உள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக விளையாட உள்ளார். ரிஷப் பண்ட் இந்திய அணியில் இடம்பெறுவதை தேர்வுக்குழு முடிவு செய்துள்ள நிலையில், கேஎல் ராகுலுக்கு அஜித் அகார்கர் அட்வைஸ் செய்துள்ளார்.
“நீண்டகாலமாக ரிஷப் பண்ட் வெளியில் உள்ளார். அவருக்கு அதிக சுமை கொடுக்காமல், உள்ளே கொண்டுவர நினைக்கிறோம். நீண்ட இடைவெளிக்கு பின் திரும்பும் ஒருவரை, படிப்படியாக தான் கொண்டுவர வேண்டும். இது தொடர்பாக கேஎல் ராகுலுக்கு அளிக்கப்பட்ட கருத்து, நீங்கள் ரீசெட் பட்டனை அழுத்த வேண்டும் என்பது தான்,” என பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் தெரிவித்தார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…