வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் சுப்மன் கில் சரியாக விளையாடாமல் இருக்கிறார். கடைசியாக நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 33 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். அதற்கு முன்னதாக முதல் போட்டியில் அவர் சரியாக விளையாடவில்லை அதேபோல வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவர் சிறப்பாக செயல்படவில்லை.
ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக விளையாடி வந்த சுப்மன் கில் திடீரென மோசமாக விளையாடி வருவதால் சுப்மன் கில்லை பலரும் விமர்சித்து பேசி வருகிறார்கள். இதற்கிடையில், கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சுப்மன் கில் சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளார். அது என்ன சாதனை என்றால் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் 26 போட்டிகளின் முடிவில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை பாகிஸ் தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் வைத்திருந்தார். தற்போது அவரை பின்னுக்கு தள்ளி சுப்மன் கில் சாதனையை படைத்துள்ளார். 1. சுப்மன் கில் இந்தியா அணிக்காக 1352* ரன்கள் 2 அவருக்கு அடுத்ததாக பாபர் அசாம் பாகிஸ்தான் அணிக்காக 1322 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.
மேலும், கடந்த சில சுப்மன் கில் சரியாக பேட்டிங் செய்யவில்லை என்றாலும் கூட இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளதால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடர்கிறது இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, இந்த அணி பேட்டிங்செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…