Categories: Cricket

திமிரும் இல்ல ஈகோவும் இல்ல! கபில்தேவ் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த ஜடேஜா!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ்  சமீபத்திய பேட்டி ஒன்றில் இளம் கிரிக்கெட் வீரர்கள் இப்போது எல்லாம் எந்த ஒரு உதவியும் தேவையில்லை என்பது போல விளையாடுவதாகவும் கோடி கோடியாக அவர்களுக்கு பணம் கிடைப்பதால் அவர்களுக்கு ஈகோவும் திமிரும் வந்துவிட்டது என கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். இவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் , இதற்கு பல கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் .

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் கபில்தேவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசி உள்ளார். இது தொடர்பாக பேசிய ரவீந்திர ஜடேஜா கபில்தேவ் சொல்வது தேவையில்லாத ஒரு கருத்து என்று எனக்கு தோன்றுகிறது . என்னை பொறுத்தவரை நான் சொல்ல வருவது என்னவென்றால்  முன்னால் கிரிக்கெட் வீரர்கள் அனைவருக்குமே தங்களுடைய மனதில் உள்ள கருத்துக்களை வெளிப்படையாக சொல்ல முழு உரிமை உண்டு.

Ravindra-Jadeja

ஆனால் எதையும் தெரியாமல் சொல்லக்கூடாது, கபில்தேவ்  வீரர்களுக்கு ஈகோ திமிரு உள்ளதாக தெரிவித்திருக்கிறார் . நிச்சயமாக அவர் சொல்வது போல இந்திய அணியில் உள்ள வீரர்கள் யாருக்கும் ஈகோ எந்த ஒரு திமிரு கிடையாது. நாங்கள் அனைவரும் மிகவும் ஒற்றுமையுடன் மூத்த வீரர்கள் அறிவுரையின்படி தான் விளையாடி வருகிறோம் .

Ravindra-Jadeja-Featured-Img

எங்களுடைய முழு நோக்கம் இந்திய அணிக்காக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைப்பது தான் அதற்காக நாங்கள் கடினமாக பயிற்சியும் எடுத்து வருகிறோம் . எங்களுடைய மனதில் அது  மட்டும் தான் இருக்கிறது என்பதை தவிர ஈகோ என ஒன்றுமே இல்லை. கபில்தேவுக்கு ஜடேஜா  பதிலடி கொடுத்துள்ளார்.

Web Desk

Recent Posts

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…

34 mins ago

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…

1 hour ago

WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…

2 hours ago

WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை

மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…

3 hours ago

INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…

4 hours ago

WT20 உலகக் கோப்பை: அவுட் ஆன நியூஸி. வீரர், அந்தர் பல்டி அடித்த அம்பயர்.. கடுப்பான இந்திய கேப்டன்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…

4 hours ago