Connect with us

Cricket

1000 நாள் ஆகிடுச்சி.. பாவம் பா பாகிஸ்தான்.. Feel பண்ணும் அஸ்வின்

Published

on

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது அந்த அணிக்கு கடுமையான விமர்சனங்களை பெற்றுக் கொடுத்துள்ளது. அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள், மற்றும் பலர் பாகிஸ்தானின் படுதோல்வியை மறக்க கடுமையாக வசைபாடி வருகின்றனர். பாகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

இதில் இரு டெஸ்ட் போட்டிகளிலும் வங்கதேசம் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி அசத்தியது. மேலும், பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் சாதனை படைத்தது. இரு அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதன்பிறகு நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வங்கதேசம் அணி பாகிஸ்தானை வீழ்த்தை தொடரை கைப்பற்றியதை விட பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது இந்திய வீரர் ரவிசந்திரன் அஸ்வினை வருத்தம் அடைய செய்துள்ளது. இது குறித்து பேசிய அஸ்வின், “வங்கதேசம் அணி அபார வெற்றி பெற்றுள்ளது, ஆனால் பாகிஸ்தானுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றம். பாகிஸ்தானை அவ்வளவு எளிதில் வீழ்த்த முடியாது என்பதே இதற்கு முக்கிய காரணம்.”

“கிட்டத்தட்ட 1000 நாட்களுக்கும் மேலாக பாகிஸ்தான் அணி தனது சொந்த மண்ணில் வெற்றி பெறாமல் தவிக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் உணர்ச்சி மிக்கவர்கள். யாருக்காக நான் இப்படி ஃபீல் செய்கிறேன் என்று உங்களுக்கு தெரியுமா? பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றைத் தான்.”

“வக்கர் யூனிஸ், வாசிம் அக்ரம், ஷோயப் அக்தர், இம்ரான் கான், இன்சமாம் உல் ஹக், இஜாஸ் அகமது, சலிம் மாலிக், சயித் அன்வர், அமீர் சோஹைல் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆளுமை மிகப்பெரியது,” என்று தெரிவித்தார்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *