அமெரிக்காவில் தற்போது மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனுடைய 5 லீப் போட்டியில் வாஷிங்டன் பிரீடம் அணியும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அனியும் இன்று மோதியது. இந்த போட்டியில் டிஜே பிராவோ அசத்தலான ஒரு ஆட்டத்தை ஆடி அனைவரையும் வியக்க வைத்துள்ளார். இந்த போட்டியில் டாஸ் வென்ற வாஷிங்டன் பிரீடம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு மொத்தமாக 163 ரன்கள் குவித்த நிலையில், அடுத்ததாக 164 ரன்கள் என்ற இலக்குடன் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது. இந்த போட்டியில் டெக்ஸா சூப்பர் கிங்ஸ் அணி இன்னிங்கிஸ்ஸின்போது களமிறங்கிய பிராவோ மறக்கமுடியாத ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
கிட்டத்தட்ட 39 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் 27 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்ட நிலையில் 21 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் வாஷிங்டன் பிரீடம் அணி 6 ரன்கள் வித்யாசத்தில் வெற்றிபெற்றது. ஆனாலும், இந்த அமெரிக்க மேஜர் லீக் கிரிக்கெட்டில் டுவைன் பிராவோ 103 மீட்டர் தூரத்தில் ஒரு பெரிய சிக்ஸரை அடித்தார்.
வாஷிங்டன் ஃப்ரீடம் அணியின் 17-வது ஓவரில், என்ரிச் நோர்ஜே வீசிய பந்தை பிராவோ அசத்தலாக எதிர்கொண்டு மிகப்பெரிய ஒரு பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அவர் சிக்ஸர் விலகிய அந்த பந்து, மைதானத்திற்கு வெளியே சென்றது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் வயசானாலும் உங்க பேட்டிங் உங்களை விட்டு போகவில்லை” என ஜாலியாக கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…