Categories: Cricket

AUSvIND டெஸ்ட்: எழுதி வச்சுக்கோங்க.. இதுதான் நடக்கப் போகுது – ரிக்கி பாண்டிங்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை ஒட்டி இந்திய கிரிக்கெட் அணி அடுத்தடுத்து டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. இடையில் 43 நாட்கள் வரை வீரர்களுக்கு ஓய்வு கிடைக்கும் என்ற போதிலும், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய அணி கிட்டத்தட்ட ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

இதில் வங்காளதேசம் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் உள்ளிட்டவை அடங்கும். இதன் மூலம் கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. முன்னதாக 1991-92 காலக்கட்டத்தில் இந்திய – ஆஸ்திரேலியா இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது.

அதன்பிறகு, இடைப்பட்ட ஆண்டுகளில் இரு அணிகளும், இரண்டு போட்டிகள், மூன்று போட்டிகள் மற்றும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி உள்ளன. இந்த டெஸ்ட் தொடர் உலக கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் என்று இந்த தொடர் அழைக்கப்படுகிறது. 2017 ஆம் ஆண்டில் இருந்தே பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி தக்கவைத்துக் கொண்டு வருகிறது.

2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 2020-21 காலக்கட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த தொடர் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தனி கவனம் பெற்றது. இந்த நிலையில், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் நிலைமை மாறும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய அணி வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

“இந்த தொடர் அதிக போட்டி நிறைந்த ஒன்றாக இருக்கப் போகிறது. இந்த முறை ஆஸ்திரேலியாவில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி திறமையை நிரூபிக்கும் என்று நினைக்கிறேன். தற்போது மீண்டும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இது தான் இந்த தொடரில் மிகமுக்கியமான விஷயம் ஆகும். இது அனைவரிடமும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.”

“நிச்சயம் நான் ஆஸ்திரேலிய வெற்றிக்காகவே ஆலோசனை வழங்குவேன். எப்போதும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக செயல்பட மாட்டேன். இந்த தொடரில் போட்டிகள் சமனில் முடியலாம், மோசமான வானிலை ஏற்படலாம். எனினும், ஆஸ்திரேலியா இந்த தொடரை 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தும்,” என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.

Web Desk

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago