பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மோசமான துவக்கத்தை எதிர்கொண்டார். நான்காவது வீரராக களமிறங்கிய பாபர் அசாம் இரண்டு பந்துகளை எதிர்கொண்ட நிலையில், ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதன் மூலம் இவரது மோசமான ஃபார்ம் இன்னும் தொடர்வதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.
வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நேற்று துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. டாஸ் வென்று, சரியான முடிவை எடுத்தோம் என்பதை நிரூபிக்கும் வகையில், வங்கதேச பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தானின் டாப் ஆர்டர் பேட்டர்களை முதல் செஷனிலேயே பெவிலியனுக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் பாபர் அசாம் டக் அவுட் ஆனது அந்நாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் வல்லுநர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நேற்றைய போட்டியில் டக் அவுட் ஆனதைத் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் பாபர் அசாம் எட்டாவது முறையாக டக் அவுட் ஆகி இருக்கிறார். எனினும், இது சாதனையில்லை. சொந்த மன்னில் பாபர் அசாம் டக் அவுட் ஆனது இதுவே முதல் முறை ஆகும்.
இந்த டக் அவுட் மூலம் பாபர் அசாம் மோசமான ஃபார்ம் தொடர்கிறது. கடைசி ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் பாபர் அசாம் சராசரி 40-க்கும் கீழ் சரிந்து 37.41 ஆக குறைந்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் அதிக முறை டக் அவுட் வீரர்கள் பட்டியலில் தனிஷ் கனெரியா முதலிடத்தில் உள்ளார். இவர் இதுவரை 25 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.
மோசமான ஃபார்ம் தொடரும் போதிலும், சர்வதேச கிரிக்கெட்டின் மூன்றுவகை போட்டிகளில் ஐசிசி தரவரிசையின் படி பாபர் அசாம் முதல் ஐந்து இடங்களில் இடம்பிடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் பாபர் அசாம் மூன்றாவது இடத்தில் உள்ளார். முதல் இரு இடங்களில் ஜோ ரூட் மற்றும் கேன் வில்லியம்சன் இடம்பெற்றுள்ளனர்.
இதே போன்று சர்வதேச டி20 பேட்டர்கள் தரவரிசையில் பாபர் அசாம் ஐந்தாவது இடத்திலும் ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் பாபர் அசாம் முதலிடத்திலும் உள்ளார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…