வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மஷ்ரஃப் மோர்டாசா வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில வாரங்களாக கடுமையான போராட்டம் நடைபெற்று வந்த வங்காளதேசத்தில் நாடு முழுக்க கடும் வன்முறை வெடித்தது. இதன் காரணமாக அந்நாட்டு பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலகி, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
அரசியல் மாற்றம், வன்முறை காரணமாக வங்காளதேசம் முழுக்க பதற்ற சூழல் நிலவுகிறது. இந்த வரிசையில், அந்நாட்டு பிரதமர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. பிரதமர் வீட்டில் வைக்கப்பட்ட பொருட்கள் சூறையாடப்பட்டது. மேலும் அவருக்காக தயாரிக்கப்பட்ட உணவையும் போராட்டக்காரர்கள் சுவைத்தனர். பிரதமர் வீடு முற்றுகையிடப்பட்ட சம்பவங்களை போராட்டக்காரர்கள் வீடியோக்களாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
பிரதமர் வீடு மட்டுமின்றி நாடு முழுக்க அடிதடி, தீ வைப்பு மற்றும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதே போன்று தான் வங்காளதேச அணியின் முன்னாள் கேப்டன் மஷ்ராஃப் மோர்டாசா வீட்டிற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
வங்காளதேச கிரிக்கெட் மட்டுமின்றி அரசியலிலும் மஷ்ராஃப் மோர்டாசா ஈடுபட்டு வந்தார். இவர் அந்நாட்டின் குல்னா தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
கிரிக்கெட்டில் மஷ்ராஃப் மோர்டாசா 117 போட்டிகளில் வங்காளதேச அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார். இதில் அவர் மொத்தம் 390 சர்வதேச விக்கெட்டுகளையும், 2955 ரன்களையும் எடுத்துள்ளார். இவர் மொத்தத்தில் 36 டெஸ்ட் போட்டிகள், 220 ஒருநாள் போட்டிகள் மற்றும் 54 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…