Connect with us

Cricket

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர்.. நேர்முக தேர்வில் கவுதம் கம்பீர்

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட். இவரது பதவிக்காலம் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் யார் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

இந்த நிலையில், இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் இவர்தான் என்ற வகையில், சில பெயர்கள் கூறப்பட்டு வந்தன. எனினும், இந்தியாவில் கடந்த மாதம் நடைபெற்று முடிந்த 2024 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தான் என்ற வாக்கில் தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன.

அந்த வகையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கான நேர்முக தேர்வை இன்று நடத்தியுள்ளது. மேலும், இந்த நேர்முக தேர்வில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகருமான கவுதம் கம்பீர் இன்று கலந்து கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்த தகவலை பி.சி.சி.ஐ. சார்ந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி கவுதம் கம்பீர் இன்று நடைபெற்ற பயிற்சியாளருக்கான நேர்முக தேர்வில் கலந்து கொண்டார். மேலும், அடுத்தக்கட்ட நேர்முக தேர்வு நாளை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் மட்டுமின்றி, வடக்கு மண்டலத்திற்கான தேர்வு குழு தலைவரை தேர்வு செய்வதற்கான நேர்முக தேர்வும் இன்று நடைபெற்றுள்ளதாக தெரிகிறது.

டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி தற்போது சூப்பர் 8 சுற்றில் கலந்து கொள்வதற்காக பார்படோஸில் உள்ளது. இதுவரை இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில், இந்திய அணி தனது அடுத்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை ஜூன் 20 ஆம் தேதி எதிர்கொள்கிறது.

google news

Cricket

இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…

Published

on

India Bangladesh

இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின் எதிர்த்து விளையாட இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி.

டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் வைத்து இந்த இரு அணிகளுக்கு இடையே நடந்து முடிந்தது. ஆல்-ரவுண்டர்கள் அஷ்வின் மற்றும் ஜடேஜாவின் சிறப்பான பங்களிப்பினால் வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தியது இந்திய அணி.

துவக்கத்தில் தடுமாறினாலும் நேரம் செல்லச் செல்ல தனது ஆதிக்கத்தை அதிகரித்தது. இந்திய பவுலர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாரி இறுதியில் சரண்டரானது பங்களாதேஷ். உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இந்த இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று துவங்கியது. டாஸ் போடுவதில் தாம்தம் ஏற்பட்ட நிலையில் டாஸில் வெற்றி பெற்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்து வங்கதேசத்தை பேட்டிங் செய்ய பணித்தது.

இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் மூன்று பேர் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் தனது பேட்டிங்கை தடுமாற்றத்துடனே துவங்கியது வங்கதேசம்.

Deep

Deep

இருபத்தி ஆறு ரன்களை எடுத்திருந்த நிலையில் தனது முதல் விக்கெட்டை இழந்தது அந்த அணி, இருபத்தி ஒன்பது மற்றும் என்பது ரன் கள் எடுத்திருந்த நிலையில் முறையே தனது இரண்டாவது மற்றும் மூன்றாவது விக்கெட்டுகளை இழந்தது வங்கதேச அணி. இந்திய அணியின் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆல்-ரவுண்டர் அஷ்வின் ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார்.

முப்பத்தி ஐந்து ஓவர்கள் வீசப்பட்டிருந்த நிலையில் வங்கதேச் அணி நூற்றி ஏழு ரன்களை எடுத்திருந்த நிலையில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இன்றைய ஆட்டம்  நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது நாளான நாளைய தினத்தினை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் இரு நாட்டு அணி ரசிகர்களும்.

google news
Continue Reading

Cricket

நான் கிளம்புறேன்…ரிடையர்மென்ட் சொன்ன பிராவோ…

Published

on

Bravo

அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி வீரரகள் தனது பார்முக்கு வந்து அதிரடியை காட்டத் துவங்கினால் எதிரணி வீரர்கள் எல்லாம் கப்-சிப் என மாறிவிடுவார்கள். அபாயகரமான பேட்ஸ்மேன்களையும், அதிரடி பவுலர்களையும் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டிற்கு கொடுத்துள்ளது மேற்கிந்திய தீவுகள் அணி.

சில காலங்களாகவே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது இந்த அணி. ஜாம்பவான் வீரர்கள் பலர் தங்களது ஓய்வை அறிவித்ததாலும், விளையாட்டினை தொடர முடியாமல் போனதாலும் முன் போல தனக்கான தனித்துவத்தை பெற தொடர்ந்து போராடி வருகிறது இந்த அணி.

இந்நிலையில் சர்வதேச போட்டிகள் அனைத்து விதத்திலிருந்தும் 2021ம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்த ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விடை பெறுவதாக அறிவித்துள்ளார்.

Dwayne bravo

Dwayne bravo

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக நாற்பது டெஸ்ட் போட்டிகள், நூற்றி அறுபத்தி நாலு ஒரு நாள் போட்டிகள், தொன்னூற்றி ஓரு டி-20 போட்டிகளில் விளையாடி இருந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தான தனது ஓய்விற்கு பிறகு உள்ளூர் போட்டிகளில் ஆடி வந்தார்.

இந்நிலையில் அனைத்து விதமான கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளிலிருந்தும் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார் பிராவோ. கரீபியன் கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடி வந்த நிலையில் இருபத்தி நான்காம் தேதி நடந்து முடிந்த போட்டியின் போது பிராவோ காயமடைந்திருந்தார்.

இந்த சூழலில் தனது ஓய்வு அறிவிப்பை அறிவித்தவர் கண்ணீர் மல்க விடை பெற்றார். நடந்து முடிந்த இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராகவும் இருந்து வந்தார். கத்து குட்டி அணியாகவே பார்க்கபட்ட அந்த அணி அரை இறுதி வரை முன்னேறி மற்ற அணிகளுக்கு அதிர்ச்சியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

google news
Continue Reading

Cricket

147 ஆண்டுகளில் முதல்முறை.. இலங்கை வீரர் மிரட்டல்.. கவாஸ்கர் கூட இந்த சாதனை படைக்கல

Published

on

இலங்கை அணியின் கமிந்து மென்டிஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக புதிய சாதனைகளை படைத்து வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானதில் இருந்து சாதனைகளை படைத்து வரும் கமிந்து மென்டிஸ் காலெ டெஸ்ட் கிரிக்கெட்டில் வைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிராண இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் கமிந்து மென்டிஸ் 51 ரன்களில் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானதில் இருந்து தனது முதல் எட்டு டெஸ்ட் போட்டிகளில் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் 50-க்கும் அதிக ரன்களை அடித்த வீரராக கமிந்து மென்டிஸ் சாதனை படைத்துள்ளார்.

இவ்வாறு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானதில் இருந்து, தொடர்ச்சியாக முதல் எட்டு டெஸ்ட் போட்டிகளின் அனைத்து இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்த முதல் பேட்டர் என்ற சாதனையை கமிந்து மென்டிஸ் படைத்துள்ளார். 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இத்தகைய சாதனை படைக்கப்படுவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பாகிஸ்தான் அணியின் ஷௌத் ஷகீல் தான் விளையாடிய முதல் ஏழு டெஸ்ட் போட்டிகளின் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்திருந்தார். இதற்கும் முன்பு இந்திய அணியின் சுனில் கவாஸ்கர் தொடர்ச்சியாக ஆறு டெஸ்ட் போட்டிகளின் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்தார். இதே சாதனையை பெர்ட் ஸ்கட்லிஃப், சயித் அகமது மற்றும் பசில் பட்சர் ஆகியோரும் படைத்துள்ளனர்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியை பொருத்தவரை முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 306 ரன்களை அடித்து இருந்தது. இலங்கை அணிக்கு தினேஷ் சண்டிமால் 116 ரன்களை அடித்து அசத்தினார். தற்போது ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் கமிந்து மென்டிஸ் முறையே 78 மற்றும் 51 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

நியூசிலாந்து சார்பில் டிம் சௌதி மற்றும் கிளென் பிலிப்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது.

google news
Continue Reading

Cricket

களத்தில் சண்டை.. பவுலருக்கு சோக்-ஸ்லாம் போட்ட பேட்டர்.. வீடியோ வைரல்

Published

on

கிரிக்கெட் களத்தில் வீரர்கள் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் சமீப காலங்களில் அதிகம் நடைபெறுகிறது. களத்தில் வீரர்கள் கருத்து மோதல்களில் ஈடுபடுவது, கோபத்தில் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதை பலமுறை பார்த்திருக்கிறோம். சமயங்களில் வீரர்கள் கையில் இருக்கும் பேட்-ஐ உயர்த்தி பந்துவீச்சாளரை மிரட்டுவது, பேட்-ஐ தூக்கி வீசுவது போன்ற சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

சமீபத்தில் நடைபெற்ற போட்டி ஒன்றில், கோபப்பட்ட பேட்டர் பந்துவீச்சாளருக்கு சோக்ஸ்லாம் (ஒருவரை தூக்கி கீழே வீசுவது) போட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. களத்தில் பேட்டர் அவுட் ஆனதை அடுத்து மகிழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்ட பந்துவீச்சாளர் மிகவும் ஆக்ரோஷமாக பேட்டர் அருகில் சென்று ஆர்ப்பரித்தார். ஒருக்கட்டத்தில் பேட்டர்-ஐ அவர் வெளியேறுமாறு கூறினார்.

அவுட் ஆனதும் அமைதியாய் களத்தில் இருந்து வெளியேற முற்பட்ட பேட்டர், பந்துவீச்சாளரின் ஆக்ரோஷத்தை கண்டு கோபம் அடைந்தார். இருவரும் வார்த்தைகளை விட்ட நிலையில் திடீரென கோபத்தின் உச்சிக்கு சென்ற பேட்டர், பந்துவீச்சாளரை அப்படியே தூக்கி கீழே சாய்த்தார். மேலும் அவரை கடுமையாக தாக்கவும் முற்பட்டார். இருவரையும், களத்தில் இருந்த வீரர்கள், அம்பயர்கள் தடுக்க முயற்சித்தினர்.

எனினும், முயற்சி பலனளிக்கவில்லை. ஒருக்கட்டத்தில் பேட்டை தூக்கி வீசிய பேட்டர், பந்துவீச்சாளரை தாக்க மீண்டும் முயற்சித்தார். இந்த சம்பவங்கள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. எம்சிசி வீக்டேஸ் பாஷ் XIX தொடரின் இறுதிப்போட்டியில் தான் இந்த மோதல் சம்பவம் அரங்கேறியது.

ஏரோவிசா கிரிக்கெட் மற்றும் ரப்டான் கிரிக்கெட் கிளப் அணிகள் இடையிலான போட்டியின் போது ரப்டான் கிரிக்கெட் கிளப் பேட்டர் காஷிஃப் முகமது மற்றும் ஏரோவிசா பந்துவீச்சாளர் நாசிர் அலி இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர்.

google news
Continue Reading

Cricket

ஆர்சிபி-யில் கோலியின் அரசியல்.. காட்டுத்தீயாக பரவிய தகவல்.. நெட்டிசன்களை கிழித்து தொங்கவிட்ட ரிஷப் பண்ட்

Published

on

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் -பேட்டர் ரிஷப் பண்ட் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடுவது பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவியது. ஐபிஎல் மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், அணிகளில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்த தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன.

அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் யூகங்கள் அடிப்படையில் சமூக வலைதளங்களில் வெளியாக, அதனை பலரும் பகிர வைரல் ஆகி விடுகிறது. அப்படித் தான் ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் ரிஷப் பண்ட் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் விளையாட இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

எக்ஸ் தள பதிவில் ஒருவர், “ரிஷப் பண்ட் ஆர்சிபி அணியை தனது மேலாளர் மூலம் தொடர்பு கொண்டு அந்த அணியின் கேப்டனாக தன்னை நியமிக்க கோரிக்கை விடுத்தார். ஆனால் அதனை ஆர்சிபி நிராகரித்துவிட்டது. ஆர்சிபி அணியில் ரிஷப் பண்ட் இடம்பெறக்கூடாது என்று விராட் கோலி அரசியல் செய்துவிட்டார். இதே நிலை அவருக்கு இந்திய அணியிலும் இடம்பெறலாம்,” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இது குறித்து விளக்கம் அளித்த ரிஷப் பண்ட், “போலி செய்தி. சமூக வலைதளங்களில் ஏன் இதுபோன்ற போலி செய்திகளை பரப்புகின்றீர்கள்? கொஞ்சம் அறிவுப்பூர்வமாக இருங்கள், இது மிகவும் மோசமாக உள்ளது. எந்த வித காரணமும் இன்றி நம்பிக்கையற்ற சூழலை உருவாக்கிவிடாதீர்கள். இது முதல்முறை இல்லை, மேலும் இது கடைசியாகவும் இருக்காது, எனினும் இதைப் பற்றி நான் பேச வேண்டியாகிவிட்டது.”

“உங்களது தகவல்களை தயவு செய்து சரிபார்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் இது மிகவும் மோசமாக மாறி வருகிறது. இதைமீறி உங்களிடம் தான் உள்ளது. இது உங்களுக்கானது மட்டுமல்ல, தவறான தகவல்களை பரப்பி வரும் மற்றவர்களுக்கும் தான்,” என்று குறிப்பிட்டார்.

google news
Continue Reading

Trending