இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட். இவரது பதவிக்காலம் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் யார் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
இந்த நிலையில், இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் இவர்தான் என்ற வகையில், சில பெயர்கள் கூறப்பட்டு வந்தன. எனினும், இந்தியாவில் கடந்த மாதம் நடைபெற்று முடிந்த 2024 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தான் என்ற வாக்கில் தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கான நேர்முக தேர்வை இன்று நடத்தியுள்ளது. மேலும், இந்த நேர்முக தேர்வில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகருமான கவுதம் கம்பீர் இன்று கலந்து கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்த தகவலை பி.சி.சி.ஐ. சார்ந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி கவுதம் கம்பீர் இன்று நடைபெற்ற பயிற்சியாளருக்கான நேர்முக தேர்வில் கலந்து கொண்டார். மேலும், அடுத்தக்கட்ட நேர்முக தேர்வு நாளை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் மட்டுமின்றி, வடக்கு மண்டலத்திற்கான தேர்வு குழு தலைவரை தேர்வு செய்வதற்கான நேர்முக தேர்வும் இன்று நடைபெற்றுள்ளதாக தெரிகிறது.
டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி தற்போது சூப்பர் 8 சுற்றில் கலந்து கொள்வதற்காக பார்படோஸில் உள்ளது. இதுவரை இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில், இந்திய அணி தனது அடுத்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை ஜூன் 20 ஆம் தேதி எதிர்கொள்கிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…