Connect with us

Cricket

சாம்பியன்ஸ் டிராபி 2025: பாக்.-க்கு வர முடியாது எனில் பிசிசிஐ எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கனும்!

Published

on

ஐசிசி-யின் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரை முதல்முறையாக பாகிஸ்தான் நடத்துகிறது. இந்த தொடரில் இந்திய அணி கலந்து கொள்வது பற்றி இதுவரை எந்த முடிவும் தெளிவாக தெரியவில்லை.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் தரப்பில் இந்த விவகாரத்தற்கு விரைவில் முடிவு எட்டப்படும் என்று தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் சார்பில் அதிகாரப்பூர்வ தகவல் பரிமாற்றங்கள் எதுவும் வெளியாகவில்லை.

எனினும், மற்ற அணிகளை போன்றே இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் வீரர்கள் உள்பட பலரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் வர முடியாது எனில், அது குறித்து எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இந்திய அரசு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட தனது கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப அனுமதி மறுக்கும் பட்சத்தில் அதுபற்றி எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்று பிசிபி வட்டார தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் விரைவில் முடிவு எட்டப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடுவது தொடர்பான இறுதி முடிவுகளை இந்திய அரசு தான் எடுக்க வேண்டும் என்று பிசிசிஐ தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறது. முன்னதாக 2023 ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்திய போது, இந்திய அணி தனது போட்டிகளை இலங்கையில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

இந்தியா தொடர்பான போட்டிகள் உள்பட சாம்பியன்ஸ் டிராபி அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி-க்கு ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளது. அதன்படி இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மார்ச் 1 ஆம் தேதி கராச்சியில் நடைபெற இருக்கிறது.

2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் கராச்சியில் பிப்ரவரி 19 ஆம் தேதி துவங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இறுதிப் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் தேதி மார்ச் 10 ஆம் தேதியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சில போட்டிகள் ராவல்பின்டியிலும் நடைபெற உள்ளது.

google news