இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் அன்ஷூமான் கெய்க்வாட் சிகிச்சைக்காக ரூ. 1 கோடி வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. புற்றுநோய் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று வரும் அன்ஷூமான் கெய்க்வாட்-க்கு உதவுமாறு முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இந்திய அணியின் முன்னாள் வீரர் அன்ஷூமான் கெய்க்வாட் மருத்துவ சிகிச்சைக்காக ரூ. 1 கோடி வழங்க பிசிசிஐ-க்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான தகவலை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது.
இது குறித்து வெளியான தகவல்களில், சிகிச்சை பெற்றுவரும் அன்ஷூமான் கெய்க்வாட் குடும்பத்தாரிடம் ஜெய் ஷா தொலைபேசியில் உரையாடியதாகவும், பிசிசிஐ கெய்க்வாட் குடும்பத்திற்கு பக்கபலமாக செயல்படும் என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், அன்ஷூமான் கெய்க்வாட் உடல்நிலை குறித்து பிசிசிஐ தொடர்ச்சியாக கேட்டறிந்து வருவதாகவும், விரைவில் அவர் நலம்பெற்று திரும்பவார் என்று நம்புவதாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டிகே கெய்க்வாட்-இன் மகனான அன்ஷூமான் கெய்க்வாட் லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…