Connect with us

Cricket

பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் பொறுப்பாக இருங்க! கேப்டன் ஹர்திக் பாண்டியா காட்டம்!

Published

on

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 152 ரண்கள் எடுத்தது, அடுத்ததாக 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. முதல் போட்டியை போல இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி தோல்வியை அடைந்துள்ளது.

Hardik-Pandya

Hardik-Pandya

தொடர்ச்சியாக இரண்டு போட்டிகள் தோல்வி அடைந்த காரணத்தினால் இந்த டி20 தொடரில் 2-0  என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் நேற்று இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி முடிவடைந்த பிறகு கேப்டன் ஹர்திக் பாண்டியா சற்று காட்டத்துடன் பேசி உள்ளார்.

Hardik Pandya

Hardik Pandya

இது குறித்து பேசி அவர் ‘ என்னைப் பொறுத்தவரை தோல்விக்கான காரணம் என்னவென்றால் நாங்கள் சரியாக பேட்டிங் செய்யாதது தான். நாங்கள் இன்னும் நன்றாக பேட்டிங் செய்து இதைவிட அதிகபட்ச ரன்களை எடுத்திருந்தால் அந்த கண்களை அடிப்பதற்கு வெஸ்ட் இண்டீஸ் எனக்கு சற்று சவாலானதாக இருந்திருக்கும். ஆனால் எங்களுடைய பேட்டிங்கை நாங்கள் கோட்டை விட்டு விட்டோம்.

என்னைப் பொறுத்தவரை தோழிக்கான காரணம் அதுதான் எனவே இனியாவது வரும் போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் சற்று பொறுப்பாக விளையாட வேண்டும். திலக் வர்மா அருமையாக விளையாடி ஒரு நல்ல ஸ்கோரை அடித்து கொடுக்கிறார் அதே போலவே அனைவருமே இந்திய அணியில் பேட்டிங் செய்ய வேண்டும். இந்த இரண்டாவது போட்டியிலும் நாங்கள் தோற்று விட்டோம் என்பதற்காக கவலைப்படவில்லை வரும் போட்டிகளில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்’ என தெரிவித்துள்ளார்.

 

google news

Cricket

டெஸ்ட் கிரிக்கெட்…இலக்கு எளியது….கோப்பை இந்தியாவுக்கு?…

Published

on

Ind vs Ban

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது வங்கதேச கிரிக்கெட் அணி. மூன்று இருபது ஓவர் போட்டி தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரினல் விளையாட இந்தியாவிற்கு வந்துள்ள வங்கதேச அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வைத்து நடந்த இந்தப் போட்டியில் அசாத்திய திறமையை வெளிப்படுத்திய இந்திய அணி அசத்தலான வெற்றியை பெற்றது. இந்திய அணியின் ஆல்-ரவுண்டர்களான அஷ்வின் – ஜடேஜா இணை பேட்டிங் மற்றும் பவுலிங்கில் ஜொலிக்க, வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா. இந்த இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்று வருகிறது.

Test Series

Test Series

டாஸ் வென்று பங்களாதேஷை பேட்டிங் செய்ய வைத்தது இந்தியா, மழை குறுக்கீட்டின் காரணமாக போட்டி தடை பெற்று வந்த நிலையில் நான்காம் நாள் ஆட்டம் முழுவதுமாக நடந்து முடிந்தது.

போட்டியை வென்றாக வேண்டும் என்ற முனைப்போடு இந்திய வீரர்கள் இருபது ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதைப் போல பேட்டிங்கில் அதிரடி காட்டினர். இந்திய அணி முன்னிலை பெற்று டிக்ளர் செய்ய தனது இரண்டாவது இன்னிங்ஸை தடுமாற்றத்துடன் தொடர்ந்தது வங்காளதேசம்.

ஐந்தாம் நாளான இன்று நூற்றி நாற்பத்தி ஆறு ரன்களை எடுத்து பத்து விக்கெட்டுகளையும் இழந்தது வங்கதேசம். தொன்னூற்றி ஐந்து ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வருகிறது இந்தியா.

நாலு ஓவர்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இருபத்தி ஒன்பது ரன்களை எடுத்து ரோஹித் சர்மாவின் விக்கெட்டினை பறிகொடுத்து விளையாடி வருகிறது இந்தியா. இந்த போட்டியில் வென்றாலும், டிராவில் முடிவடைந்தாலும் இந்திய அணி கோப்பையை தன் வசப்படுத்திக்கொள்ளும்.

 

google news
Continue Reading

Cricket

கான்பூர் சம்பவம்.. பின்னணியில் கம்பீர்-ரோகித் பிளான்.. டிரெசிங் ரூம் சீக்ரெட் சொன்ன பந்துவீச்சு பயிற்சியாளர்

Published

on

மழை காரணமாக இரண்டு நாள் ஆட்டம் தடைப்பட்ட நிலையில், வங்கதேசம் அணி நான்காம் நாள் ஆட்டத்தை எப்படி கொண்டு செல்வது என நிச்சயம் திட்டம் தீட்டியிருக்கும். எனினும், அவை அனைத்தையும் ஓவர்டேக் செய்யும் அளவுக்கு இந்திய அணி தனது செயல்பாடுகளில் தீவிரம் காட்டியது. துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது, வங்கதேசம் அணியின் விக்கெட்டுகளை விரைந்து வீழ்த்தியது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி ஸ்கோர் போர்டை எகிற செய்த சம்பவம் பலருக்கும் நீண்டகாலம் நினைவில் நிற்கும். இந்த நிலையில், நான்காம் நாள் ஆட்டம் துவங்கும் முன் இந்திய டிரெசிங் ரூமில் என்ன நடந்தது, இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங் தொடங்கும் முன் எடுக்கப்பட்ட முடிவு என்ன? என்ற கேள்விகளுக்கு இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பதில் அளித்துள்ளார்.

“கவுதம் கம்பீரின் மனநிலை கூட, போட்டியில் ஆதிக்கம் செலுத்தி, முடிந்த வரை முன்னணியில் இருக்க வேண்டும் என்பதாகவே இருந்தது. இதனை சாத்தியப்படுத்த ஒரு தலைவர் முன்னணியில் இருந்து செயல்பட வேண்டியது மிகவும் முக்கியம் ஆகும். அந்த வகையில், ரோகித் சர்மா இதனை பலமுறை செய்து காட்டிய நிலையில், மீண்டும் அதை நிரூபித்துள்ளார். பந்து பவுன்ஸ் ஆகலாம், மெல்ல கீழேயும் வரலாம் என்ற பிட்ச்-இல் தான் எதிர்கொண்ட முதல் பந்தில் இருந்தே சிக்ஸ் அடித்தது.”

“பந்துவீச்சில் சற்று பின்னடைவு ஏற்படலாம். ஆனால், கேப்டன் முன்னணியில் இருந்து செயல்படுவது, அணியை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வதை பார்க்க சிறப்பாக இருக்கிறது. என்னைப் பொருத்தவரை இது மிகவும் அருமையாகவும், ரசிக்கும் படியாகவும் இருந்தது. ஒவ்வொருத்தரும் தங்களது பணியில் மிகவும் ஈடுபாடு கொண்டுள்ளனர், அதனை களத்திலும் பிரதிபலிக்க செய்கின்றனர். மீண்டுவருவதை பார்க்கும் போது அவர்கள் அங்கு சரியாகவே உள்ளனர்,” என்று மோர்னே மோர்கல் தெரிவித்தார்.

google news
Continue Reading

Cricket

கோலி-அஷ்வின் டாக்டிக்ஸ்.. உடனே விழுந்த விக்கெட்

Published

on

இந்தியா வங்கதேசம் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தை கிரிக்கெட் ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. இரண்டு நாள் ஆட்டத்தில் வெற்றியை பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி காட்டிய வேகம் பல சாதனைகளை படைத்ததோடு, வங்கதேசம் வீரர்கள் மற்றும் ஒட்டுமொத்த ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நான்காவது நாளில் வங்கதேசம் அணி இரண்டாவது இன்னிங்ஸ் பேட் செய்ய வைத்த ரோகித் சர்மா, நேற்றைய ஆட்டம் முடிவதற்குள் சில விக்கெட்டுகளை வீழ்த்துவதில் தீயாக செயல்பட்டார். இதற்கு ஏற்றார் போல் பந்துவீச்சாளர்களை களமிறக்கியதோடு, நினைத்தப்படி இந்திய அணி முன்னிலையில் இருப்பதை உறுதிப்படுத்தினார். நேற்றைய ஆட்டத்தின் நிறைவில் இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட்டை எடுக்க பல தந்திரங்களை தொடர்ச்சியாக கையாண்டனர்.

அந்த வகையில், ரவிச்சந்திரன் அஷ்வின் சுழலில் சிக்கி வங்கதேசம் அணி இரண்டு விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது. ஒவ்வொரு வீரருக்கும் எப்படி பந்துவீச வேண்டும் என்ற திட்டமிடல் அணியினருடன் எப்போதும் இருக்கும். நேற்றைய ஆட்டத்தில் ரவிச்சந்திரன் அஷ்வின் வீசிய குறிப்பிட்ட ஓவரை வங்கதேசம் அணியின் துவக்க வீரரான ஜாகிர் ஹாசன் எதிர்கொண்டார். அப்போது குறுக்கிட்ட இந்திய வீரர் விராட் கோலி, அஷ்வினிடம் ஏதோ கருத்து தெரிவித்தார்.

இதன்பிறகு, அஷ்வின் வீசிய பந்தில் ஜாகிர் ஹாசன் தனது விக்கெட்டை பறிக்கொடுத்து பெவிலியன் திரும்பினார். இடதுகை ஆட்டக்காரரான ஹாசன் பத்து ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். நேற்றைய ஆட்டநேர முடிவில் வங்கதேசம் அணி 26 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இன்னிங்ஸில் 26 ரன்கள் பின்னணயில் உள்ளது.

முன்னதாக இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் காரணமாக இந்திய அணி 34.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.

google news
Continue Reading

Cricket

விக்கெட் இருந்தும் டிக்ளேர் செய்த ரோகித்.. பின்னணியில் பக்கா ஸ்கெட்ச்.. பயங்கரமா இருக்கே..!

Published

on

இந்தியா வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அதன் நான்காம் நாளில் பற்றி எரிந்தது. நான்காம் நாளின் முதல் செஷனில் இருந்தே வேலையை காட்டத் துவங்கிய இந்திய அணி, படிப்படியாக அதிரடி அவதாரம் எடுத்து ஆடியது. இந்தப் போட்டின் இரண்டு நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது ரசிகர்களை ஏமாற்றம் கொள்ள செய்தது.

இரண்டு நாள் ஏமாற்றத்திற்கு தீனிப்போடும் வகையில், நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி விஸ்வரூப மோடிற்கு மாறியது. வங்கதேசம் அணியை 233 ரன்களில் ஆல் அவுட் ஆக்கிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் துவக்கத்திலேயே டாப் கியருக்கு மாறியது. ரோகித் மற்றும் ஜெய்ஸ்வால் ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்த, டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் மூன்று ஓவர்களில் 50 ரன்களை கடந்தது.

இருந்தும், விடாமல் அடித்து ஆடிய இந்திய அணி 10.1 ஓவரில் 100 ரன்களையும், 18.2 ஓவர்களில் 150 ரன்களையும் கடந்தது. இடையில் சில விக்கெட்டுகள் சரிந்த நிலையில், அடுத்தடுத்து வந்த வீரர்கள் ஃபயர் மோடில் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதனால், இந்திய அணி 24.4 ஓவர்களில் 200 ரன்களை கடந்தது. பிறகு 30.4 ஓவர்களில் இந்திய அணி 250 ரன்களை கடந்தது.

இவ்வாறு டெஸ்ட் போட்டியில் அதிவேக 50 ரன்கள், 100 ரன்கள், 150 ரன்கள், 200 ரன்கள் மற்றும் 250 ரன்களை அடித்த முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. 34.4 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்களை குவித்த போது, முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. 21-ம் நூற்றாண்டில் 25 ஓவர்களுக்குள் டெஸ்ட் போட்டியின் இன்னிங்ஸில் டிக்ளேர் செய்த முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.

கைவசம் விக்கெட் இருந்த போதிலும், இந்திய கேப்டன் இன்னிங்ஸை டிக்ளேர் செய்ய சூப்பர் காரணம் இருந்தது. கைவிசம் விக்கெட் இருக்கும் போது, கூடுதல் ரன்களை அடிப்பதை பலரும் திட்டமிடுவர். எனினும், நான்காம் நாள் ஆட்டத்தில் கிட்டத்தட்ட 20 ஓவர்கள் வரை பந்துவீச நேரம் இருக்கும் போது, இந்திய கேப்டன் ரோகித் சர்மா டிக்ளேர் செய்தார்.

இவ்வாறு செய்ததும், பந்துவீச களமிறங்கிய இந்திய வீரர்கள் விக்கெட் கைப்பற்றுவதில் தீவிரம் காட்டினர். மேலும், நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசம் அணி 26 ரன்களை மட்டுமே அடித்து 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதோடு, ஐந்தாம் நாள் ஆட்டத்தை துவங்கும் போது அந்த அணி 26 ரன்கள் பின்தங்கியிருக்கும்.

ஐந்தாம் நாள் ஆட்டத்திலும், வங்கதேசம் அணியை குறைந்த ரன்களில் ஆட்டமிழக்க செய்து, எஞ்சியுள்ள ரன்களை அடித்து போட்டியில் வெற்றி பெறுவதை ரோகித் சர்மா திட்டமாக வைத்திருக்கிறார். இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அட்டவணையில் இந்திய அணி தொடர்ந்து முன்னணி இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

Cricket

டெஸ்ட் போட்டியில் டி20 மோட்.. இந்தியா படைத்த சாதனைகள்.. முழு லிஸ்ட்..!

Published

on

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வங்கதேசம் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் பல சாதனைகளை படைத்து அசத்தியது. இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. முதலாது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகள் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெறுகிறது.

இந்த போட்டியின் 2 மற்றும் 3-ம் நாள் ஆட்டங்கள் மழை காரணமாக கைவிடப்பட்டதை அடுத்து நேற்று நான்காம் நாள் ஆட்டம் துவங்கியது. இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ள நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெறும் நோக்கில் இந்திய அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த வகையில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடர்ந்த வங்கேதேசம் அணி 233 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி அதிரடி துவக்கம் கொடுத்தது. இந்திய அணிக்கு முதல் இன்னிங்ஸை தொடங்கிய ரோகித் சர்மா முதல் இரண்டு பந்துகளை சிக்சருக்கு அனுப்பினார்.

மேலும், இந்திய வீரர்கள் துவக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 38.4 ஓவர்களில் 285 ரன்களை குவித்தது. இந்த இன்னிங்ஸில் மட்டும் இந்திய அணி ஐந்து உலக சாதனைகளை படைத்து அசத்தியுள்ளது.

  • டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி அடித்த அதிவேக 50 ரன்கள், 100 ரன்கள், 150 ரன்கள், 200 ரன்கள் மற்றும் 250 ரன்கள் என்ற சாதனையை நேற்றைய ஆட்டத்தின் ஒற்றை இன்னிங்ஸில் இந்திய அணி படைத்தது.
  • டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஒன்றில் வீரர் ஒருவர், தான் சந்தித்த முதல் இரண்டு பந்துகளை சிக்சருக்கு அனுப்பிய நான்காவது வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.
  • சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 ரன்களை அடித்த நான்காவது வீரராக விராட் கோலி உள்ளார். முன்னதாக சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், குமார் சங்கக்காரா ஆகியோர் 27,000 ரன்களை அடித்துள்ளனர்.
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய ஏழாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை ரவீந்திர ஜடேஜா பெற்றுள்ளார்.
  • 2024 ஆம் ஆண்டில் மட்டும் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் 96 சிக்சர்களை அடித்துள்ளது. இதன் மூலம் ஒரே ஆண்டில் அதிக சிக்சர்களை அடித்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.
google news
Continue Reading

Trending