Cricket
வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான டெஸ்ட் – வேற லெவல் சாதனை படைத்த பென் ஸ்டோக்ஸ்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார். இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிர்க் மெக்கன்சி விக்கெட்டை வீழ்த்தினார். இந்த விக்கெட் டெஸ்ட் கிரிக்கெட்டில் பென் ஸ்டோக்ஸ்-இன் 200-வது விக்கெட் ஆக மாறியது.
அந்த வகையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை எடுத்த மூன்றவாது வீரர் என்ற பெருமையை பென் ஸ்டோக்ஸ் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் ஆல் ரவுண்டர்களான ஜாக்ஸ் காலிஸ் மற்றும் கார்ஃபீல்டு சோபர்ஸ் ஆகியோர் மட்டுமே உள்ளனர். அந்த வரிசையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு 6000 ரன்களை குவித்த வீரர்களில் பென் ஸ்டோக்ஸ் மூன்றாவது இடம்பிடித்துள்ளார்.
புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில் பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் 201 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் லூயிஸ் விக்கெட்டை பென் ஸ்டோக்ஸ் வீழ்த்தி இருந்தார்.
கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வரும் பென் ஸ்டோக்ஸ் இதுவரை 6316 ரன்களை குவித்துள்ளார். இது அவரின் 102-வது டெஸ்ட் போட்டி ஆகும். இதில் 13 சதங்களையும், 31 அரைசதங்களையும் பென் ஸ்டோக்ஸ் விளாசியுள்ளார். இதுதவிர எட்டு முறை 4 விக்கெட்டுகளையும், நான்கு முறை 5 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பான் வீரரான கேலிஸ் தென் ஆப்பிரிக்கா அணிக்காக 13,289 ரன்களை விளாசியுள்ளார். இதில் 45 சதங்கள், 58 அரைசதங்கள் அடங்கும். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 292 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது சராசரி 32.65 ஆகும்.