சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் முதல் முறையாக நடத்த இருக்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த தொடர் துவங்க உள்ளது. இந்த நிலையில், தொடரை நடத்த இருக்கும் பாகிஸ்தான் பிரச்சினைகளை எதிர்கொள்ள துவங்கியது.
டி20 உலகக் கோப்பை தொடர் நிறைவு பெற்றதில் இருந்தே, சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தானுக்கு பயணம் செய்து விளையாடுமா என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்த விவகாரத்திற்கு இதுவரை தெளிவான முடிவு கிடைக்காமல் உள்ளது. இந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் செல்ல வாய்ப்பு இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
இரு நாடுகள் இடையிலான அரசியல் பிரச்சினைகள் காரணமாக இந்திய அரசு இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணிக்கான போட்டிகளை துபாய் அல்லது இலங்கையில் நடத்த பிசிசிஐ சார்பில் ஐசிசி-க்கு கோரிக்கை விடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்த பாகிஸ்தான் வீரர் ஹாசன் அலி, அவர்கள் பயணம் செய்ய முடியாது என்று முடிவெடுத்தால் அவர்கள் இல்லாமல் தொடர் நடைபெறும் என்று தெரிவித்தார்.
சமா டிவியில் பேசிய ஹாசன் அலி, “நாங்கள் இந்தியாவுக்கு பயணம் செய்து விளையாடுகிறோம் எனில், அவர்களும் பாகிஸ்தானுக்கு வரவேண்டும். பலர் இது குறித்து கூறும் போது விளையாட்டில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளனர். இதை வேறு கோணத்தில் அனுகும் போது, பல இந்திய வீரர்கள் பாகிஸ்தானில் விளையாடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.”
“அந்த வகையில், அணிக்கு இங்கு வருவதில் எந்த பிரச்சினையும் இல்லை. எனினும், இது குறித்து இறுதி முடிவை எடுப்பதற்கு அவர்களுக்கென தனி திட்டங்கள், நாடு மற்றும் வாரியம் உள்ளது. எங்களது கிரிக்கெட் வாரிய தலைவர் ஏற்கனவே கூறியதை போன்று, சாம்பியன்ஸ் கோப்பை பாகிஸ்தானில் நடைபெறும் எனில், அது பாகிஸ்தானில் மட்டும் தான் நடக்கும்.”
“இந்தியா வர முடியாது எனில், நாங்கள் அவர்கள் இல்லாமலேயே விளையாடுவோம். பாகிஸ்தானில் தான் கிரிக்கெட் விளையாடப்பட வேண்டும். இந்தியாவால் கலந்து கொள்ள முடியாது எனில், கிரிக்கெட் முடிவுக்கு வந்ததாக அர்த்தமில்லை. இந்தியா தவிர்த்து பல்வேறு இதர அணிகள் உள்ளன,” என்று அவர் தெரிவித்தார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…