ஐசிசி-இன் சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் நடத்த இருக்கிறது. இதற்காக சமீபத்தில் நிதி ஒதுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்வது இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது.
தற்போதைய தகவல்களின் படி இந்திய அணி பாகிஸ்தான் பயணம் செய்யும் வாய்ப்புகள் மிகவும் குறைவு தான் என்று கூறப்படுகிறது. மறுப்பக்கம் தொடரை நடத்தும் பாகிஸ்தான் இந்தியாவுக்கான போட்டிகள் அனைத்தையும் லாகூரில் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், ஒருவேளை பிசிசிஐ இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுக்கும் பட்சத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக ஐசிசி மாற்று திட்டமிடல்களை மேற்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, மூத்த நிர்வாகிகள் அடங்கிய குழு அளித்துள்ள ஒப்புதல் அறிக்கையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மேலும் ஐசிசியுடன் இணைந்து நிதி அறிக்கை ஒன்றை உருவாக்கி அதனை ஒப்புதலுக்கு அனுப்பி இருந்தது. ஏற்கனவே திட்டமிட்ட நிதியை அதிகப்படுத்தி, அதற்கு நிர்வாகமும் ஒப்புதல் அளித்து இருக்கிறது. ஒருவேளை போட்டிகள் பாகிஸ்தானுக்கு வெளியில் விளையாட வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படலாம்.
இது தொடர்பாக ஆலோசனை மற்றும் திட்டமிடல் கூட்டம் மற்றும் போட்டி நடைபெறும் இடங்களை ஆய்வு செய்யும் வழிமுறைகள் இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து போட்டி நடைபெறும் இடங்களை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு செய்வதன் மூலம் அதிநவீன வசதிகளை வழங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.
2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றன. கடந்த வாரம் இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான நிதி ஒதுக்கப்பட்டது. இதில் மற்ற செலவீனங்களுக்காக தனி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…