ஐபிஎல் போட்டிகளில் அதிரடி காட்டிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறார். இதில் முதல் டெஸ்ட் போட்டி இதுதான் அவருடைய சர்வதேச கிரிக்கெட் போட்டி . அந்த அறிமுகமான சர்வதேச முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 178 ரன்கள் குவித்து அதிர வைத்தார்.
அதனைத் தொடர்ந்து நேற்று இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கிய நிலையில் நிதானமாக முதலில் ரோஹித் சர்மாவுடன் விளையாடி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் திடீரென அவுட் ஆனார். முதல் போட்டியை போல இந்த போட்டியிலும் அவர் சதம் அடிப்பார் என பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், அரை சதம் மட்டும் விளாசி ஆட்டத்தை விட்டு வெளியேறி சென்று விட்டார்.
இது ரசிகர்கள் மட்டுமின்றி சிலருக்கு ஏமாற்றத்தை அளித்த நிலையில், அது தனக்கும் ஏமாற்றம் என போட்டி முடிந்த பிறகு யஷஸ்வி ஜெய்ஸ்வால் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய ஜெயஸ்வால் நான் முதல் போட்டியை போல இரண்டாவது போட்டியிலும் சதம் விளாசலாம் என நினைத்தேன். ஆனால் அவுட் ஆகிவிட்டேன். இது எனக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது.
இந்திய அணிக்காக இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நான் விளையாடுகிறதே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் என்னால் முடிந்தவரை எவ்வளவு கடின உழைப்பு கொடுக்க முடியுமோ..? அதை அளவிற்கு கடின உழைப்பை இந்திய அணிக்காக நான் கொடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் விராட் கோலி குறித்து பேசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் விராட் கோலி உடன் நான் இன்று விளையாடியது மிகவும் மகிழ்ச்சியான தருணம். அவர் ஒரு மிகவும் பெரிய லெஜெண்ட் அவருடன் விளையாடுவது எனக்கு ஆசையாக இருந்தது அந்த ஆசை நிறைவேறிவிட்டது. இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இதனை நான் மறக்கவே மாட்டேன் எனவும்” யஷஸ்வி ஜெய்ஸ்வால் பேசி உள்ளார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…