Categories: Cricket

நான் சிக்ஸ் கொடுத்தாலும், டோனி சொன்னது இதுதான்.. சிஎஸ்கே வீரர் ஓபன் டாக்

சர்வதேச கிரிக்கெட்டில் ஜாம்பவான விக்கெட் கீப்பர், கேப்டனாக அறியப்படுவர் மகேந்திர சிங் டோனி. இந்திய அணி மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனி பல இளம் வீரர்கள் கிரிக்கெட்டில் ஜொலிக்க ஆலோசனை வழங்கியுள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை அணி கேப்டன் பதவியில் இருந்து விலகிய எம்எஸ் டோனி அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே, ஐபிஎல் தொடர்களில் எம்எஸ் டோனியுடனான உரையாடல்கள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். சமீபத்திய இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இடையிலான தொடர் மூலம் தேஷ்பாண்டே இந்திய அணியில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“நான் சர்வதேச அளவில் தேர்ச்சி பெறுவதற்கான திறமையை கொண்டிருப்பதாக எம்எஸ் டோனி என்னிடம் கூறினார். ஆனாலும், பந்துவீச ஓடும் போது அமைதியாக இருக்க வேண்டும். பந்துவீச ஓடி வரும் போது ரசிகர்கள் எழுப்பும் ஆரவாரத்தால் கவனம் சிதறாமல் இருக்க வேண்டும். ஆழமாக மூச்சு விட்டு, அதன்பிறகு பந்துவீச வேண்டும் என்றார். ஆனால், டோனி இப்படி கூறுவதே ஒரு சாதனை படைத்ததற்கு சமமாதுதான்.”

“என் பந்துகளில் சிக்சர் அடிக்கப்பட்டால், டோனி என்னிடம் நீ எந்த தவறும் செய்யவில்லை. நீ வீசியவை நல்ல பந்துகள் தான். இன்றைய நாள் உனக்கானது இல்லை. அடுத்த போட்டியிலும் இதையே பின்பற்ற வேண்டும் என்று கூறுவார். என்னை ஃபிட்னஸில் கவனமாக இருக்க வேண்டும் என்று டோனி கூறியுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்,” என்று துஷார் தேஷ்பாண்டே தெரிவித்தார்.

Web Desk

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago