Connect with us

Cricket

அடேங்கப்பா இந்த 2 வீரருக்கு மட்டும் 18 கோடியா..? அப்ப தோனிக்கு எவ்வளவு…? 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே..!

Published

on

ஐபிஎல் 18 வது சீசனுக்கான ஏலத்திற்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வீரர்களை தக்க வைத்திருக்கின்றது.

ஐபிஎல் இல் ஒரு வெற்றிகரமான அணியாக இருந்து வருவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதுவரை 5 முறை வெற்றி கோப்பையை வென்றிருக்கின்றது. அதிக கோப்பைகளை வென்றவர்கள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் முதலிடத்தில் இருக்கின்றது. 2023 ஆம் ஆண்டு கேப்டனாக செயல்பட்ட மகேந்திர சிங் டோனி கோப்பையை வென்று அசத்தினார்.

இதை தொடர்ந்து அடுத்த சீசனில் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பிளேயராக மட்டும் செயல்பட்டார். கடந்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் சிஎஸ்கே அணி 5-வது இடத்தை பிடித்து வாய்ப்பை இழந்தது. இந்நிலையில் தற்போது ஐபிஎல் 18 வது சீசனுக்கான மெகா ஏலம் நடைபெற இருக்கின்றது. அதற்கு முன்னதாக சிஎஸ்கே அணியானது யார் யாரை தக்கவைக்கும்? யார் யாருக்கு எவ்வளவு ஊழியம்? என்பது குறித்து தகவல் வெளியாகியிருக்கின்றது.

அதன்படி சிஎஸ்கே தங்களது வீரராக சமச்சீர் சிங்கை தான் தக்கவைக்கும் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் 5 வீரர்களை மட்டுமே தக்க வைப்பதற்கு தற்போது சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்து இருக்கின்றது. மேலும் அன்கேப்ட் வீரர் இடத்தில் தோனியை தக்க வைப்பது ஏறத்தாழ உறுதியான நிலையில் மீதி வீரர்களை மட்டும் தக்க வைப்பதற்கு முயற்சி மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில் கேப்டன் ருத்ராட்ச் கேய்க்வாட், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு தலா 18 கோடி வழங்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளது. 18 கோடி கொடுத்து இந்த இரண்டு வீரர்களையும் தக்க வைப்பதற்கு சிஎஸ்கே நிர்வாகம் முன் வந்திருக்கின்றது. அதைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக விளையாடும் சிவம் தூபேவையும் 14 கோடி கொடுத்து சிஎஸ்கே நிர்வாகம் தக்கவைக்க முடிவு செய்து இருக்கின்றது.

அதற்கு அடுத்ததாக குட்டி மல்லிங்கா என்ற பெயரை பெற்றிருக்கும் பதிரனாவை சிஎஸ்கே தக்கவைக்க முடிவு செய்துள்ளது. இவரை 11 கோடிக்கு தக்க வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது வரை 5 வீரர்களை மட்டுமே சிஎஸ்கே நிர்வாகம் தக்க வைக்க விரும்புவதால் ஒரு ஆர்டிஎம் கார்டு சிஎஸ்கேவுக்கு கிடைக்கும்.

அந்த கார்டை வைத்து டிவோன் கான்வே, தீக்‌ஷனா, முஸ்தபிசுர் ரஹ்மான், டேரில் மிட்செல், தீபக் சஹார், ராசின் ரவீந்திரா போன்றவர்களில் யாரோ ஒருவரை வாங்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.

google news