ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர். சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். எனினும், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தேர்வு செய்யப்பட்டால் அணிக்காக விளையாட தயார் என்று அறிவித்து இருந்தார். ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் டேவிட் வார்னரை அவசரத்திற்கு ஆப்ஷனாக பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்து இருந்தார்.
டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக களமிறங்கிய டேவிட் வார்னர் ஜூன் 24 ஆம் தேதியுடன் டி20 போட்டிகளில் ஓய்வை அறிவித்தார். முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உலகக் கோப்பையை வென்ற பிறகு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டேவிட் வார்னர் அறிவித்தார். டேவிட் வார்னர் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய அணிக்காக தனது கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார்.
ஓய்வு குறித்து சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் டேவிட் வார்னர் கூறும் போது, “சாப்டர் முடிந்தது. நீண்ட காலம் மிக உயரிய இடத்தில் விளையாடியது நம்பமுடியாத அனுபவம். ஆஸ்திரேலியா எனது அணியாக இருந்தது. பெரும்பாலும் நான் சர்வதேச கிரிக்கெட்டில் தான் விளையாடி இருக்கிறேன். இதை செய்ய முடிந்ததை பெருமையாக நினைக்கிறேன்.”
“அனைத்து வித கிரிக்கெட்டிலும் 100 போட்டிகள் விளையாடியதே எனது ஹைலைட். சில காலத்திற்கு பிரான்சைஸ் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். தேர்வு செய்யப்படும் பட்சத்தில் ஆஸ்திரேலியா அணிக்காக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
டேவிட் வார்னர் மீண்டும் விளையாடுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பேட் கம்மின்ஸ் கடந்த ஜனவரி மாதம் பதில் அளித்திருந்தார். அப்போது, “இந்த விஷயத்திற்கு நேரம் கொடுப்பது அவசியம் ஆகும். எனினும், அவர் எப்படி இருந்தாலும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு தான் இருப்பார். அந்த வகையில், அவரை தேர்வு செய்வது அவசர கால முடிவாக இருக்கும்.”
“எப்படி இருந்தாலும் அவர் உலகின் ஏதேனும் ஒரு பகுதியில் ரன்களை விளாசி கொண்டுதான் இருப்பார். அந்த வகையில், இது தான் முடிவு என்று எப்போதும் நினைத்துவிட முடியாது,” என்று தெரிவித்தார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…