Cricket
சர்வதேச கிரிக்கெட்டுக்கு “குட்பை” சொன்ன டேவிட் வார்னர்
உலகளவில் அதிரடியான பேட்டர்களில் ஒருவரான டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஆஸ்திரேலியா அணி அதிகாரப்பூர்வமாக வெளியேறியதை அடுத்து டேவிட் வார்னர் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடரின் கடைசி சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து, ஆஸ்திரேலியா அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது.
முன்னதாக அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரில் தான் கடைசியாக ஆஸ்திரேலிய ஜெர்சியை அணிவேன் என்று டேவிட் வார்னர் தெரிவித்து இருந்தார். எனினும், இவர் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்காக டேவிட் வார்னர் கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2023 உலகக் கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு துவக்கத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியோடு, டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
கடைசியாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக டேவிட் வார்னர் 43 பந்துகளில் 89 ரன்களை விளாசியதே அவரின் தலைசிறந்த இன்னிங்ஸ்-ஆக பார்க்கப்படுகிறது. 110 போட்டிகளில் விளையாடி இருக்கும் டேவிட் வார்னர் 3277 ரன்களை குவித்திருக்கிறார்.