Connect with us

Cricket

பாபர் அசாமிடம் பிரச்சினையே இதுதான்.. புட்டுபுட்டு வைத்த தினேஷ் கார்த்திக்..!

Published

on

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான பாபர் அசாம் சமீப கால டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவரது ஃபார்ம் குறித்து ஏராளமான கருத்துக்கள் தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பாபர் அசாம் பேட்டிங்கில் மீண்டும் ஃபார்முக்கு வர முடியாமல் தவிக்கிறார்.

இதுவரை மூன்று இன்னிங்ஸில் ஆடியுள்ள பாபர் அசாம் 0, 22 மற்றும் 31 ரன்களில் விக்கெட்டை பறிக்கொடுத்து பெவிலியன் திரும்பினார். இதன் காரணமாக முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ச்சியாக பாபர் அசாம் ஃபார்ம் பற்றி கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதனிடையே, பாபர் அசாம் விவகாரத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், கிரிக்கெட் வீரராக பாபர் அசாம் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது. சமீப காலங்களில் அவர் ரன் குவிக்க முடியாமல் தவிக்கிறார். அவர் கடுமையான அழுத்தத்தில் இருப்பதாக நான் நினைக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட் தவிர மற்ற வகை போட்டிகளில் கேப்டனாக செயல்படுவது பாபர் அசாமுக்கு அழுத்தமாக மாறுவதாக தெரிகிறது என்றார்.

தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய தினேஷ் கார்த்திக், “வீரராக பாபர் அசாம் தரம் குறித்து யாரும் சந்தேகப்பட முடியாது. அவரிடம் அசாத்திய திறமை உள்ளது, எனினும், தற்போது அவர் ஏராளமான அழுத்தத்தில் இருப்பதாக நான் நினைக்கிறேன். அவர்கள் அந்த விஷயத்தில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.”

“வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் அவர்கள் முன்கூட்டியே டிக்ளேர் செய்ததாக நான் நினைக்கிறேன். ஆசியாவில், நீண்ட நேரம் பேட்டிங் செய்வது, முதல் இன்னிங்ஸில் நீண்ட நேரம் பேட் செய்வது அவசியம்,” என்று தெரிவித்தார்.

google news