வெஸ்ட் இண்டீஸ் என்கே எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் இளம் ஆட்டக்காரர் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி அரை சதம் விளாசினார். முதல் போட்டியில் ஒரு ரன் கூட எடுக்காத நிலையில், இந்த இரண்டாவது போட்டியில் அரைசதம் விளாசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இந்த நிலையில் இந்த போட்டியில் அவர் பயன்படுத்திய பேட் வேறொரு இந்திய கிரிக்கெட் வீரரின் பேட் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.
அவர் விளையாடிய அந்த பேட்டில் ஒரு குறியீடு ஒன்று இருந்தது அதனை வைத்து தற்போது இந்த பேட் காயத்தில் தற்போது இருந்து மீண்டு வரும் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் உடைய பேட் என தெரியவந்துள்ளது. அந்த பேட்டை வைத்து தான் இஷான் கிஷன் அரை சதம் விளாசியுள்ளார். நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு இஷான் கிஷன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அதில் ” என்னுடைய இந்த அரை சதம் அணிக்கு தேவையான ஒன்று.
என்னிடமிருந்து அனைவரும் அரைசதத்தை எதிர்பார்த்தார்கள் விராட் கோலி அவருடைய 3 எண்ணில் என்னை இறங்க சொல்லி எனக்கு வாய்ப்பை வழங்கினார். அவருக்காக தான் நான் இந்த முயற்சியை எடுத்தேன். நமக்காக வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள் நாம் நன்றாக விளையாட வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடினேன். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மிகவும் அருமையாக பந்து வீசினார்கள் அவர்களுடைய பந்து மெதுவாக பேட்டிற்கு வந்தது.
இன்று நல்ல நாளாக அமைந்தது போல எங்களுக்கு நாளையும் நல்ல நாளாக அமைய வேண்டும் என நான் எதிர்பார்த்த காத்துக் கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் எனக்கு வாய்ப்பு வழங்கிய விராட் கோலிக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நானும் ரிஷபந்தும் ஒன்றாக கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம் அவருக்கும் எனக்கும் நல்ல ஒரு உறவு இருக்கிறது. அவர் எனக்கு மிகவும் பிடித்த ஒருவர். அவர் என்னைப் பற்றி நிறைய விஷயங்களை பல இடங்களில் கூறியிருக்கிறார். அவருடைய அறிவுரைகளும் எனக்கு பெரிதாக உதவியுள்ளது “எனவும் தெரிவித்துள்ளார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…