பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் துலீப் கோப்பை 2024 தொடரின் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகள் மோதுகின்றன. போட்டியின் போது இந்தியா ஏ அணியின் கேப்டன் சுப்மன் கில் ஜெர்சியை டேப் செய்து அணிந்துள்ள சம்பவம் பேசுபொருளாகி இருக்கிறது.
தான் வழக்கமாக அணியும் “77” எண் கொண்ட ஜெர்சி கிடைக்காததால் சுப்மன் கில் வேறொரு வீரரின் ஜெர்சியை வாங்கி அணிந்து கொண்டு விளையாடியுள்ளார். இவ்வாறு செய்யும் போது வேறு ஜெர்சி எண் காரணமாக எந்த குழப்பமும் ஏற்பட கூடாது என்பதில் சுப்மன் கில் உறுதியாக இருந்துள்ளார்.
இதன் காரணமாகத் தான் சுப்மன் கில் டேப் செய்யப்பட்ட ஜெர்சி அணிய காரணம் என்று கூறப்படுகிறது. அண்டர் 19 உலகக் கோப்பை தொடரில் பயன்படுத்திய எண் என்பதால் சுப்மன் கில் தனக்கு ஏழு அடங்கிய ஜெர்சி சாதகமாக இருக்கும் என்று உணர்கிறார். இதையே சர்வதேச கிரிக்கெட்டிலும் பயன்படுத்த வேண்டும் என்று கருதிய சுப்மன் கில் “77” ஜெர்சியை பயன்படுத்தி வருகிறார்.
துலீப் கோப்பை தொடரில் வைத்து சுப்மன் கில் கேப்டனாக எப்படி செயல்படுகிறார் என்பதை பரிசீலனை செய்யப்படுகிறது. இந்தியா ஏ அணி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டது. இதன் காரணமாக இந்தியா பி அணி 94 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அதன்பிறகு முஷீர் கான் மற்றும் நவ்தீப் சைனி இந்தியா பி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…