இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஓல்லி ராபின்சன். சமீபத்தில் நடைபெற்ற கவுண்டி கிரிக்கெட்டில் ஓல்லி ராபின்சன் மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார். சசெக்ஸ் அணிக்காக களமிறங்கிய ஓல்லி ராபின்சன் லெய்செஸ்டர்ஷயர் அணிக்கு எதிரான 2-வது டிவிஷன் போட்டியில் வீசிய ஓவர் அவரை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது.
இவர் வீசிய முதல் பந்தை லூயிஸ் கிம்பர் என்ற வீரர் சிக்சருக்கு பறக்கவிட்டார். அடுத்த பந்து நோ பால் ஆனது. இதையும் விட்டுவைக்காத லூயிஸ் அதனையும் சிக்சராக மாற்றினார். அடுத்த மூன்று பந்துகளில் லூயிஸ் 4,6,4 என பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இதில் 5-வது பந்தும் நோ பால் ஆக அமைந்தது. அடுத்த பந்து சரியாக வீசிய போதும், அது பவுண்டரியை கடந்தது.
அடுத்து வீசிய பந்து மீண்டும் நோ பால் ஆக அமைந்தது. அதையும் லூயிஸ் சிக்சருக்கு பறக்கவிட்டார். இறுதியில் அந்த ஓவரின் கடைசி பந்தை சரியாக வீசிய ஓல்லி ராபின்சன் அதில் 1 ரன்னை மட்டுமே கொடுத்தார். எனினும், இந்த ஓவரில் மட்டும் 6,6,4,6,4,6,4,6,1 என மொத்தம் 43 ரன்கள் அடிக்கப்பட்டன.
ஓவருக்கு ஆறு பந்துகள் வீசப்படும் நிலையில், அனைத்தையும் சிக்சராக அடித்தால் கூட 36 ரன்களை மட்டுமே அடிக்க முடியும். அந்த வகையில், ஓவரில் எக்ஸ்டிராஸ் வீசுவது, அதனை பேட்டர் தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் போது ஓவரில் ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் அதிகரிப்பது தான் இந்த போட்டியில் அரங்கேறி இருக்கிறது.
முன்னதாக 1989-90-க்களில் நடைபெற்ற வெலிங்டன் மற்றும் கேண்டர்பரி அணிகள் இடையிலான போட்டி ஒன்றில் ராபெர்ட் வேன்ஸ் என்ற பந்துவீச்சாளர் ஒரு ஓவருக்கு 77 ரன்களை விட்டுக்கொடுத்தார். இதுவே தற்போது கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இருக்கிறது.
இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்து வீச்சாளரான ஓல்லி ராபின்சன் அந்த அணிக்காக 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 76 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…