Connect with us

Cricket

94 ஆண்டுகால சாதனையை முறியடித்த இங்கிலாந்து வீரர்

Published

on

இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தினார். மான்செஸ்டரில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் ஜேமி ஸ்மித் அடித்த சதம் சாதனையாக மாறியுள்ளது. இங்கிலாந்து அணியில் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த இளம் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ஜேமி ஸ்மித் படைத்துள்ளார்.

முன்னதாக 1930 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் லீ அமெஸ் தனது 24 வயது 63 ஆவது நாளில் சதம் அடித்தார். போர்ட் ஆஃப் ஸ்பெயினில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் லீ அமெஸ் இந்த சாதனையை படைத்திருந்தார். தற்போது ஜேமி ஸ்மித் தனது 24 வயது, 42 ஆவது நாளில் சதம் அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம் வயதில் சதம் அடித்த இங்கிலாந்து வீரர் ஆகியுள்ளார்.

“இயன் பெல் எனக்கு பக்க பலமாக இருந்துள்ளார். லயன்ஸ் மற்றும் பிர்மிங்காம் ஃபீனிக்ஸ் அணிகளில் கடந்த சில ஆண்டுகளில் அவர் எனக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தார். அவர் எனக்கு அளித்த அறிவு, டெஸ்ட் சீரிஸை நான் எதிர்நோக்குகிறேன் என்று, போட்டிகளுக்கு முன் எனக்கு வீசிய பந்துகள் என எல்லாவற்றுக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.”

“உங்களுக்கு ஆதரவாக ஒருத்தர் இருப்பது சிறப்பான விஷயம் என்று நினைக்கிறேன். அவர்கள் எதிரணியில் இருந்த போதிலும் உங்களுக்கு உதவுவது சிறப்பானது. அவரின் உதவிக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்த மைல்கல்லை எட்டியது நன்றாக இருக்கிறது. நான் நிதானமாக இருக்கிறேன். களத்திற்கு சென்று விளையாடுவது மிகவும் சவுகரியமான உணர்வை கொடுக்கிறது,” என ஜேமி ஸ்மித் தெரிவித்தார்.

google news