Connect with us

Cricket

பாகிஸ்தான் கிரிக்கெட் பாழாகிவிட்டது – கிழித்தெடுத்த முன்னாள் வீரர்

Published

on

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மோசமாக விளையாடிய பாகிஸ்தான் அணி, லீக் சுற்று போட்டிகளோடு தொடரில் இருந்து வெளியேறியது. நடப்பு டி20 உலகக் கோப்பையில் மூன்று போட்டிகளில் விளையாடி இருக்கும் பாகிஸ்தான் அணி ஒரேயொரு போட்டியில் தான் வெற்றி பெற்றது.

இதன்மூலம் க்ரூப் ஏ பிரிவில் உள்ள பாகிஸ்தான் அணி புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதனால் அந்த அணி தொடரில் இருந்து வெளியேறியது. பாகிஸ்தான் அணி வெளியேறியதை அடுத்து அந்நாட்டு ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் என பலரும் தங்களின் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஏற்கனவே பாகிஸ்தான் அணியின் செயல்பாடு குறித்து அந்நாட்டு முன்னாள் வீரர் அகமது ஷேசாத், பாபர் அசாமை கடுமையாக சாடினார். தற்போது தொடரில் இருந்து அணி வெளியேறியதை அடுத்து பாபர் அசாம் மற்றும் அணியின் முன்னணி வீரர்களை அகமது திட்டித் தீர்த்தார்.

இதுகுறித்து பேசிய அவர், கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளாக பாபர் அசாம், ஷாஹீன் அப்ரிடி, பகர் ஜமான், முகமது ரிஸ்வான் மற்றும் ஹாரிஸ் ரௌஃப் பாகிஸ்தான் அணியில் தொடர்ச்சியாக விளையாடி வருகின்றனர். சிறப்பாக செயல்படுவதற்கு ஏற்கனவே அவர்களுக்கு தேவைக்கும் அதிகமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அணிக்குள் ஒரு குழுவை உருவாக்கிக் கொண்டு ஒருவரையொருவர் காப்பாற்றி கொண்டு வருகின்றனர். எல்லா முறையும் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்கிறோம் என்கிறார்கள். அப்படி எதைத்தான் கற்றுக் கொண்டீர்கள்.

நெட் ரன்ரேட்-ஐ அதிகப்படுத்திக்கொள்ள கனடா அணியை பெரிய இடைவெளியில் வீழ்த்தி இருக்க வேண்டும். எனினும், ரிஸ்வான் மிகவும் பொறுமையாக அரைசதம் அடிக்கிறார். பாபரும் நிதானமாகவே ஆடினார். தனிநபர் சாதனைகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் பாழாகிவிட்டது.

தலைமை பண்பு குறித்து பேசுகிறீர்கள் ஆனால் உங்களிடம் அப்படி எதுவும் இல்லை. நீங்கள் வெறும் சோஷியல் மீடியா கிங் ஆகவே இருக்கின்றீர்கள். உங்களுக்கு 4-5 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டும், நீங்கள் எங்களுக்கு வெற்றியை கொடுக்கவில்லை.

உங்களின் ஃபிட்னஸ் அளவும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. நீங்கள் அணியில் அரசியல் செய்கின்றீர்கள், என்று தெரிவித்தார்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *