இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்திய அணிக்காக 180 சர்வதேச போட்டிகள், ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் 257 போட்டிகளில் தினேஷ் கார்த்திக் விளையாடியுள்ளார்.
இதுவரை இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 1025 ரன்களையும், ஒருநாள் போட்டிகளில் 1752 ரன்களையும், டி20 போட்டிகளில் 686 ரன்களையும் குவித்துள்ளார். கிரிக்கெட் மட்டுமின்றி கிரிக்கெட் சார்ந்த இதர விஷயங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தினேஷ் கார்த்திக் தன்னை ஆக்டிவாக வைத்துக் கொள்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அந்த வகையில், ரசிகர் ஒருவரின் பதிவு தினேஷ் கார்த்திக்-ஐ திக்கமுக்காட வைத்தது.
குழப்பத்தில் பதிவிட்ட ரசிகருக்கு தினேஷ் கார்த்திக் அளித்த பதில், ரசிகர்களை மேலும் கொண்டாட வைத்துள்ளது. பிக் பகைட் என்ற பெயர் கொண்ட எக்ஸ் தள கணக்கில் இருந்து தினேஷ் கார்த்திக்-க்கு பதிவு ஒன்று டேக் செய்யப்பட்டு இருந்தது. அந்த பதிவில், “தற்போது தான் பிர் ஆயி ஹசீன் தில்ருபா பார்த்தேன், சிறப்பாக நடித்திருக்கிறீர்கள்,” என்று குறிப்பிட்டு இருந்தார்.
உண்மையில், அந்த படத்தில் நடித்திருந்தது முன்னணி இந்தி நடிகர் விக்ராந்த் மாசே ஆகும். எனினும், அந்த பதிவை போட்ட ரசிகர் விக்ராந்த் மாசவுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்-ஐ டேக் செய்துவிட்டார். இதை பார்த்த தினேஷ் கார்த்திக் அதற்கு பதிலும் அளித்தார். அதில், “ஓ அப்படியா? நன்றி,” என குறிப்பிட்டு கூடவே வாய்விட்டு சிரிக்கும் எமோஜிக்களை இணைத்துள்ளார்.
தினேஷ் கார்த்திக்-ஐ ரசிகர் ஒருவர் நடிகராக நினைத்து போட்ட பதிவை விட, அதற்கு தினேஷ் கார்த்திக் அளித்த பதில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…