Categories: Cricket

“மகாராஷ்டிராவின் சஞ்சு சாம்சன், கெய்க்வாட்” – கோபத்தில் கொதித்த ரசிகர்கள்

வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் பட்டியலை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. 16 வீரர்கள் அடங்கிய இந்திய அணியில் மூத்த வீரர்கள், இளம் வீரர்கள் பலம்வாய்ந்ததாகவே இருக்கிறது. எனினும், இந்திய அணி தேர்வில் பாரபட்சம், அரசியல் செய்யப்படுவதாக ரசிகர்கள் இணையத்தில் காட்டமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட், விராட் கோலி இடம்பெற்றுள்ளனர். மேலும் இளம் வீரரான யாஷ் தயால் டெஸ்ட் அணியில் அறிமுகமாகிறார். இருந்த போதிலும் இந்திய அணியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சில வீரர்கள் சேர்க்கப்படவில்லை. இதில் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு வாய்ப்பு வழங்கப்படாதது ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்திய துலீப் கோப்பை தொடரில் இந்தியா சி அணி வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ருதுராஜ் கெய்க்வாட் 48 பந்துகளில் 46 ரன்களை அடித்தார். 27 வயதான ருதுராஜ் கெய்க்வாட் இந்தியா டி அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்டார். இதன் காரணமாக அவர் இடம்பெற்ற இந்தியா சி அணி அபார வெற்றி பெற்றது.

முதல்தர கிரிக்கெட்டில் ருதுராஜ் கெய்க்வாட்-இன் சராசரி 42.69 ஆக உள்ளது. எனினும், இவர் இன்னும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கவில்லை. கெய்க்வாட் துவக்க வீரராக களமிறங்குவார் என்பதால், அணியில் அவருக்கான இடம் கிடைப்பது தாமதமாகி வருகிறது. இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஜோடி பலமான துவக்கத்தை கொடுத்து வருகிறது.

இவர்களைத் தொடர்ந்து சுப்மன் கில் மூன்றாவது வீரராக களமிறங்குகிறார். கேப்டனாக இருப்பது, சமீபத்திய ஆட்டங்களை பார்த்ததில், ஆடும் லெவனில் ரோகித் சர்மா தவிர்க்க முடியாத துவக்க வீரராக விளங்குகிறார். இதே போன்று ஜெய்ஸ்வால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 700 ரன்களை விளாசியுள்ளார். இதே போன்று சுப்மன் கில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 452 ரன்களை விளாசியுள்ளார்.

இந்திய அணியின் டாப் ஆர்டர் அதிக பலம் வாய்ந்த ஒன்றாக இருப்பது ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இடம்பிடிக்க தடையாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இத்தனை காரணங்கள் கூறப்பட்டாலும், ருதுராஜ் கெய்க்வாட் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்காதது ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ரசிகர்களில் ஒருத்தர், “ருதுராஜ் கெய்க்வாட் மகாராஷ்டிராவின் சஞ்சு சாம்சன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

இவரை போன்று ஏமாற்றத்தை பகிர்ந்து கொண்ட மற்றொரு ரசிகர், “மீண்டும் அரசியல் வென்றது,” என குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், “மீண்டும் அரசியல். மற்றொரு ஸ்குவாட் எனினும், ருதுராஜ் கெய்க்வாட் இல்லை. உறுதியாக இருங்கள் சாம்ப். ஒவ்வொரு தாமதமும் உங்களை தலைசிறந்த கம்பேக் கொடுக்க தயார்படுத்திக் கொண்டு இருக்கிறது. உங்களுக்கான நேரம் நெருங்குகிறது,” என குறிப்பிட்டுள்ளார்.

Web Desk

Recent Posts

சன்னுக்கு ரெஸ்டு?…இன்னைக்கு ரெயின் ஸ்டார்ட்சு!…வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கும் அப்-டேட்…

தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…

3 mins ago

இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…

10 mins ago

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனை.. ஜடேஜாவின் சூப்பர் சம்பவம்

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து…

31 mins ago

INDvBAN 2வது டெஸ்ட்: கருணை காட்டாத மழை.. ஒருபந்து கூட போடல, 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல்…

1 hour ago

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

21 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

22 hours ago