Connect with us

Cricket

பவுண்டரி தடுத்தாச்சு, Overthrow-ம் இல்லை.. ஓடியே 5 ரன் எடுத்த வீரர்

Published

on

ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி பெல்பாஸ்டில் நடைபெற்றது. இந்த போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது அயர்லாந்து அணியின் ஆல் ரவுண்டர் ஆண்டி மெக்பிரைன் ஒரே பந்தில் ஐந்து ரன்களை அடித்த சம்பவம் அரங்கேறியது. 158 ரன்களை துரத்திய அயர்லாந்து அணி இந்த போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

இந்த இன்னிங்ஸின் 18 ஆவது ஓவரில் ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் கரவா வீசிய பந்தை, அயர்லாந்து வீரர் மெக்பிரைன் ஆஃப் சைடில் விளாசினார். பவுண்டரி நோக்கி சென்ற இந்த பந்தை, ஜிம்பாப்வே வீரர் டென்டை சத்ரா துரத்தி சென்று பவுண்டரியை தடுத்தார்.

எனினும், பந்தை தடுத்த வேகத்தில் தனது கட்டுப்பாட்டை இழந்த டென்டை பவுண்டரியை கடந்து சென்றுவிட்டார். அதன்பிறகு அவர் மீண்டும் களத்திற்குள் வந்து பந்தை எடுப்பதற்குள் அயர்லாந்து வீரர்களான ஆண்டி மெக்பிரைன் மற்றும் லார்கன் டக்கர் விடாது ஓடி ஐந்து ரன்களை சேர்த்தனர்.

ஓவர்த்ரோ கூட இல்லாமல், அயர்லாந்து வீரர்கள் ஒரே பந்தில் ஐந்து ரன்களை ஓடியே எடுத்ததை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

போட்டியில் ஆண்டி மெக்பிரைன் மற்றும் லார்கன் டக்கர் ஜோடி 96 ரன்களை சேர்த்தது. இதன் மூலம் அயர்லாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

google news