வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மா சதம் விளாசியும் ரோஹித் ஷர்மா பற்றி பலர் எதிர்மறையான விமர்சனங்களை கூறி வருகின்றனர். ரோஹித் ஷர்மாவை மட்டும் பாராட்டாமல் அவருடைய கேப்டன்சியை குறை கூறி மற்றொரு சதம் விளாசிய ஜெயஸ்வாலை மற்றும் அரைசதம் விளாசிய விராட் கோலியை சிலர் பாராட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ரோஹித் ஷர்மாவை விமர்சித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய சுனில் கவாஸ்கர் ” ரோஹித் ஷர்மா தலைமையில் தான் ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியை சந்தித்தது. ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான போட்டியில் கூட டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
எதிர் அணியில் 5 இடதுகை வீரர்கள் இருந்தும் இந்திய கிரிக்கெட் அணியின் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் அஸ்வினை தேர்ந்தெடுக்காமல் விட்டது மிகவும் மோசமான செயல். சுமாராக கேப்டன்ஷிப் செய்து பேட்டிங்கிலும் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் சொதப்பியது தோல்விக்கு முக்கிய காரணமானது.
நீண்ட காலமாக அதாவது இந்திய கிரிக்கெட்டி அணி 2011 ஆண்டிலிருந்து 0 – 4, 0 – 4 என்ற கணக்கில் அடுத்தடுத்த தொடர்களில் படுதோல்வியை சந்தித்தது. ஆனால் இன்னும் கேப்டன் மாற்றப்படவில்லை. அதற்கான காரணம் என்னவென்றும் எனக்கு தெரியவில்லை. அதனால், பாண்டியா தலைமையில் டி20 கிரிக்கெட் தொடரில் புதிய அணியை உருவாக்கியதை போல டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ரோஹித்துக்கு பதில் புதிய கேப்டனை நியமித்து இளம் அணியை உருவாக்க வேண்டுமென ரசிகர்கள் விரும்புகின்றனர்” என விமர்சித்து பேசியுள்ளார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…