இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் அரங்கேறிய, அந்து ஒருவிஷயத்தில் இருந்து இன்னும் மீள முடியவில்லை என்று தெரிவித்தார். 2011 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் கவுதம் கம்பீர் சிறப்பாக ஆடி 97 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
அந்த போட்டியின் முடிவில், அப்போதைய கேப்டன் மகேந்திர சிங் டோனி இலங்கை அணிக்கு எதிராக கடைசி ரன்களை அடித்து வெற்றியை உறுதி செய்தார். இந்த சம்பவம் குறித்து கவுதம் கம்பீர் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், சிறப்பான இன்னிங்ஸ் ஆடிய போதிலும், கடைசி வரை கிரீசில் நின்று போட்டியை முடிக்க முடியாமல் போனது இன்றும் வருத்தமாகவே உள்ளது. ஒருவேளை டைம் மெஷின் கிடைத்தால், நிச்சயம் அந்த போட்டி நடந்த காலத்திற்கு திரும்பி சென்று போட்டியின் கடைசி ரன்களை அடித்து இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறப்பான இடத்தை பிடிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ரசிகர்களுக்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்று நான் எப்போதும் நினைத்துக் கொண்டு இருப்பேன். எனது கிரிக்கெட் வாழ்க்கை துவங்கியதில் இருந்தே எனக்கு இந்த எண்ணம் எழுத் துவங்கியது. இடையில் ஆறு போட்டிகளில் அணிக்காக கேப்டன் பொறுப்பை ஏற்றேன். அப்போது என்னால் முடிந்தவரை சிறப்பாக செயல்பட வேண்டும் என்றே முயற்சித்தேன் என்றார்.
இவைதவிர கிரிக்கெட்டில் எனக்கு வேறு எந்த வருத்தமும் இல்லை. எனக்கு கொடுக்கப்பட்ட வேலை அணியை வெற்றி பெற செய்ய வேண்டும். நான் எந்த அணிக்காக விளையாடினாலும், அந்த அணி வெற்றி பெற வைக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…