Connect with us

Cricket

அது என் வேலையில்லை.. செய்தியாளரை திணறடித்த ஹர்மன்பிரீத் கௌர்

Published

on

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர், செய்தியாளருக்கு அளித்த பதில் வைரல் ஆகி வருகிறது. மகளிர் கிரிக்கெட் அணிகள் விளையாடும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டி துவங்கும் முன் இந்தியா மற்றும் இலங்கை அணி கேப்டன்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கௌரிடம் செய்தியாளர், கேட்ட கேள்வி நகைப்பை ஏற்படுத்தியது. சிரிப்பை அடக்க முடியாதவராக இலங்கை அணி கேப்டன் சமாரி அட்டப்பட்டு சிரித்துவிட்டார்.

“வங்காளதேசம் அணிக்கு எதிரான தொடருக்கு பின், மகளிர் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. உங்களது செய்தியாளர் சந்திப்புகளுக்கு குறைந்த எண்ணிக்கையிலான செய்தியாளர்களே வருகின்றனர். இதுபற்றி என்ன நினைக்கின்றீர்கள்?” என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு முகம் முழுக்க புன்னகையுடன் பதில் அளித்த ஹர்மன்பிரீத் கௌர், “அது என் வேலை இல்லை. நீங்கள் தான் வந்து, எங்களை பற்றி செய்தி சேகரிக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.

ஆசிய கோப்பை 2024 தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான அணியை எதிர்கொள்கிறது. இது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த ஹர்மன்பிரீத் கௌர், “பாகிஸ்தானை எதிர்த்து விளையாடுவது எங்களுக்கு எப்போதும் மகிழ்ச்சியை கொடுக்கும். எல்லா அணியும் முக்கியம் தான். எப்போது விளையாட சென்றாலும், நல்ல கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று மட்டும்தான் நினைப்போம். அதையே பின்பற்றுவோம்,” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்த தொடர் எங்களுக்கு மிக முக்கியமான ஒன்று. இதற்கு சம அளவு மரியாதை கொடுத்து ஆசிய கிரிக்கெட்டை உலக அளவிற்கு மேம்படுத்த வேண்டும். டி20 உலகக் கோப்பை, மற்ற உலகக் கோப்பை தொடர்களை போன்றே, இந்த தொடருக்கும் நாங்கள் ஒரே மாதிரியே தயாராகிறோம். எங்களுக்கு ஒவ்வொரு போட்டியும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். முடிந்தவரை சிறப்பாக விளையாடுவோம்.” என்று தெரிவித்தார்.

google news