இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் பற்றி பலரும் சமீப காலமாக விமர்சித்து பேசி வருகின்றனர். குறிப்பாக நேற்று கூட இந்திய அணியின் முன்னாள் வேக பந்துவீச்சாளர் ஆர்.பி.சிங் சூர்யா குமார் யாதவ் டி20 கிரிக்கெட் தொடரை போல ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் அருமையாக விளையாட மாட்டார் அவர் நம்பர் 4-வது இடத்தில் இறங்கினால் மட்டுமே அருமையாக விளையாடுவார் என தெரிவித்திருந்தார்.
அவரைத் தொடர்ந்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சமீபத்திய பேட்டி ஒன்றில் சூர்யகுமார் யாதவியின் பார்ம் குறித்து பேசி உள்ளார். இது குறித்து பேசி அவர் “என்னைப் பொறுத்தவரை சூர்யகுமார் யாதவ் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் அவரால் டீ20 கிரிக்கெட்டில் எந்த அளவிற்கு அருமையாக விளையாட முடிந்ததோ அதே அளவிற்கு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட முடியவில்லை.
அதற்கு காரணம் என்னவென்றால் அவர் பெரிதாக ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவது கிடையாது. இதனை அவரிடமே நீங்கள் கேட்டால் அவரே ஒப்புக்கொள்வார். ஒரு நாள் போட்டி குறித்து அவர் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக பல விஷயங்களை கற்றுக் கொண்டு வருகிறார். இப்போதுதான் மிடில் ஓவரில் நம் ஒருநாள் தொடரில் எப்படி எல்லாம் விளையாட வேண்டும் என்பது குறித்து கற்றுக் கொண்டு வருகிறார் .
அவரிடம் நிறைய திறமையாக உள்ளது. எனவே அவர் ஒரு சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்ற காரணத்தினால் அவரைத் தூக்கி விட்டு கூடாது அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என கூறியுள்ளார். மேலும் இந்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்தியா தோல்வி அடைந்துள்ள நிலையில், பயிற்சியாளர் டிராவிட்டை கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அணி தேர்வில் டிராவிட் தோல்வி அடைந்துவிட்டதாகவும், அவரை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…