இந்தியன் முன்னாள் கேப்டன் தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக கேப்டனாக விளையாடி வருகிறார். இதுவரை அவருடைய தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை கோப்பையை வென்று அசத்தியுள்ளது . குறிப்பாக நடந்து முடிந்த அதாவது 2023 ஐபிஎல் போட்டியில் கூட குஜராத்திற்கு எதிரான அந்த போட்டியில் சென்னை அணி கோப்பையை வென்றது.
இந்நிலையில் 42 வயதாகும் தோனி எப்போது வேண்டுமானாலும் ஐபிஎல் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறலாம் என ரசிகர்கள் பதற்றத்துடனே இருக்கிறார்கள். தோனி ஓய்வு எடுத்து விட்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அனியை யார் கேப்டனாக வழி நடத்துவார் என்ற கேள்வி நம்மளுடைய அனைவருடைய மனதிலும் அடிக்கடி கேள்வி எழுப்பிக் கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு சென்னை அணி அடுத்த கேப்டன் இவராக இருக்கலாம் என ஒருவரை பற்றி பேசி உள்ளார். இதுகுறித்து பேசிய அவர் தோனி தலைமையில் விளையாடுவது என்பது ஒரு நல்ல விஷயம். ஏனென்றால் அவருடைய பல வித்தியாசமான முயற்சிகள் அனைத்துமே நம் அணிக்கு வெற்றிக்கு வழிவகுக்கும்.
தோனியின் உடல் தகுதி தற்போது நன்றாக இருக்கிறது. எனவே, அவர் தொடர்ந்து விளையாட அதிக வாய்ப்புகள் இருக்கிறது . அதற்கு அடுத்தபடியாக சென்னை அணியை கேப்டனாக பொறுப்பேற்பதற்கு ருதுராஜ் கெய்க்வாட்க்கு அதிக வாய்ப்புகள் உள்ளது . ஏனென்றால் தோனி மனதில் அவர் தான் இருக்கிறார். பயிற்சியாளர் தரப்பிலும் தோனி தரப்பிலும் நல்ல ஆதரவு இருக்கிறது. ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக ஆக்க வேண்டும் என்ற பயிற்சியில் தோனி ஏற்கனவே ஈடுபட்டு வருகிறார்.
ருதுராஜ் கெய்க்வாட்க்கு இந்திய அணியில் சரியான வாய்ப்புகள் இன்னும் வழங்கப்படவில்லை. அவரும் நல்ல ஒரு இளம் கிரிக்கெட் வீரர் அவருக்கு இந்திய அணி டி20, ஒருநாள் என அனைத்து போட்டிகளிலும் விளையாட வாய்ப்பு கொடுக்கவேண்டும் அப்போதுதான் அவர் இன்னும் தனது திறமையை வெளிக்காட்ட முடியும் எனவும் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…