இளம் பேட்டிங் சென்சேஷன் திலக் வர்மா அட்டகாசமாக விளையாடி வருகிறார்.20 வயதான அவர் ஆகஸ்ட் 3 அன்று மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் T20I இல் தனது சர்வதேச அறிமுகமானார். அறிமுகமான முதல் போட்டியிலே 39 ரன்கள் எடுத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியிலும் 51 ரன்கள் எடுத்து அதிர வைத்திருந்தார். அவர் அரைசதம் அடித்தும் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைந்தது இருப்பினும் திலக் வர்மா பேட்டிங் பற்றி பலரும் வாழ்த்து பேசி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் சமீபத்திய பேட்டி ஒன்றில் திலக் வர்மா குறித்து பேசி உள்ளார். இது குறித்து பேசி அவர் திலக் வர்மாவின் பேட்டிங் மிகவும் அருமையாக இருக்கிறது. ஒரு கஷ்டமான சூழ்நிலைகள் வந்தாலும் கூட அவருடைய பேட்டிங் மிகவும் நிதானமாக அருமையாக இருக்கிறது. அவர் விளையாடும் ஷாட்கள் உலக தரத்தில் இருக்கிறது.
நிநிச்சயமாக அவர் எல்லா வடிவம் கொண்ட கிரிக்கெட் போட்டிகளிலும் அருமையாக விளையாடுவார் என நான் நினைக்கிறேன். கண்டிப்பாக திலக் வர்மா வாய்ப்புகள் கிடைத்தால் அவர் இன்னுமே தன்னுடைய திறமையை வெளிக்காட்டுவார். கண்டிப்பாக வரும் போட்டிகளிலும் அவர் சிறப்பாக செயல்படுவார் என நான் நம்புகிறேன் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ‘ என இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.
மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 152 ரண்கள் எடுத்தது, அடுத்ததாக 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…