இந்திய கிரிக்கெட்டில் இளம் வீரராக அறிமுகமாகியுள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அறிமுக போட்டியான வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதம் விளாசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இரட்டை சதத்தை அவர் தவறவிட்டாலும் 178 ரன்கள் குறித்து அனைவருடைய மனதையும் கவர்ந்தார். அந்த போட்டியை தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் அரைசதம் விளாசினார்.
இப்படி அருமையாக விளையாடி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பாராட்டி புகழ்ந்து தள்ளி வருகின்றனர். குறிப்பாக ஹர்பஜன்சிங், ரோஹித் சர்மா, இஷாந்த் சர்மா, விராட் கோலி, ஜடேஜா, அஸ்வின் உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரர்கள் புகழ்ந்து பேசினார். இந்த நிலையில் அவர்களைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான ஏ பி டி வில்லியர்ஸ் சமீபத்தில் ஊடகத்திற்கு கொடுத்த பேட்டி ஒன்றில் ஜெய்ஸ்வால் பற்றி பாராட்டி பேசி உள்ளார்.
இது குறித்து அந்த பேட்டியில் ஏபி டிவில்லியர்ஸ் பேசியதாவது “யஷஸ்வி ஜெய்ஸ்வால் பேட்டிங் பார்ப்பதற்கே மிகவும் அற்புதமாக இருக்கிறது . அவருடைய ஆட்டத்தில் ஏதோ ஒரு சிறப்பு இருந்து கொண்டே இருக்கிறது. அவர் இடது கை வீரர் என்பதால் சுழல் பந்துவீச்சுகளையும் வேகப்பந்துவீச்சைகளிலும் அவர் அருமையாக எதிர்கொள்ள அவருக்கு அது உதவியாக இருக்கிறது.
எந்த பந்தை எந்த திசையில் அடிக்க வேண்டும் என்பது பிறகு எந்த பந்தை எங்க அடித்தால் சரியாக இருக்கும் என்பதை அவர் கணக்கச்சிதமாக மனதில் வைத்து தீர்மானித்துக் கொண்டு பேட்டிங் செய்கிறார். ஒரு தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி சதம் விளாசுவது என்பது சாதாரண விஷயமே இல்லை. ஆனால் அவர் அதனை செய்தார் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என பாராட்டி பேசி உள்ளார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…