இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்றுள்ள நிலையில், அடுத்ததாக இன்று நடைபெற உள்ள ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளது. இதற்கிடையில், செய்தியாளர்களை சந்தித்த ரோஹித் சர்மாவிடம் பத்திரிகையாளர்கள் பல கேள்விகள் கேட்டனர். அப்போது வெளிநாடுகளில் விராட் கோலி இதுவரை ஐந்தாண்டுகளாக சதம் அடிக்காத நிலையில் அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.
அந்த கேள்விக்கு சற்று கடுப்பான ரோஹித் ஷர்மா “இந்த கேள்விக்கு நான் எத்தனை முறை தான் பதில் சொல்வது..? என்னிடம் இந்த கேள்வியை பலமுறை கேட்டுள்ளீர்கள் என்னைப் பொறுத்தவரை அப்படி பேசுபவர்கள் வெளி ஆட்களாக தான் இருப்பார்கள். அணியில் என்ன நடக்கிறது என்பது அவர்களுக்கு தெரியவே தெரியாது. எங்களுக்குள் என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு தான் தெரியும். நாங்கள் ஒரு தனிப்பட்ட வீரரின் அந்த விமர்சனங்களை பற்றி முதலில் யோசிப்பதே இல்லை.
எங்களை பொறுத்தவரை இந்திய அணி வெற்றி பெற வேண்டும் அதற்காக மட்டும் தான் நாங்கள் அதனை கருத்தில் கொண்டு மட்டும் தான் விளையாடுகிறோம். அதேபோலத்தான் இப்போதும் வருகின்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிகளில் நாங்கள் வெல்ல வேண்டும் அதற்காக மட்டும் தான் பயிற்சி எடுத்து வருகிறோம் மற்றபடி எந்த விமர்சனங்களை பற்றி நாங்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை இனிமேல் இதுபோன்ற கேள்விகள் கேட்டாலும் இதுதான் பதில் சொல்வேன் எனவும் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார்.
மேலும், நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி தனது 76 – வது சதத்தை அடித்து 500 வது சர்வதேச போட்டியில் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்து ஐந்தாண்டுகளாக வெளிநாடுகளில் சதம் அடிக்காத வீரர் என்ற விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…