Categories: Cricket

அவரைப்போல ஒரு வீரரை நான் பார்த்ததே இல்லை! திலக் வர்மாவை புகழ்ந்து தள்ளிய முன்னாள் கிரிக்கெட் வீரர்!!

மும்பை அணிக்காக நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக விளையாடிய திலக் வர்மா தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடரில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் முடிவடைந்துள்ளது.

இதில் ஒரு போட்டியில் 39 ரன்கள் மற்றொரு போட்டியில் 51 ரன்கள் மற்றொரு போட்டியில் 49 ரன்கள் என திலக் வர்மா அட்டகாசமாகவும் அதிரடியாகவும் விளையாடி வருகிறார் அவரைப் பற்றி பல முன்னால் கிரிக்கெட் பிரபலங்கள் பாராட்டி பேசி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா சமீபத்தில் திலக் வர்மா பற்றி பாராட்டி பேசி உள்ளார். இது குறித்து பேசிய அவர் திலக் வர்மாவின் பேட்டிங் ஒரு வித்தியாசமாக இருக்கிறது. எனக்கு தெரிந்து அவர் வருங்காலத்தில் மிகப்பெரிய கிரிக்கெட் வீரராக வளர்ந்து நிற்பார் என எதிர்பார்க்கிறேன்.

தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் இப்படி அருமையாக விளையாடி கூட ஒரு வீரரை நான் பார்த்ததே இல்லை அறிமுகமானதிலிருந்து இப்படி விளையாடுவது என்பது சாதாரண விஷயமும் இல்லை ஆனால் திலக் வர்மா அதனை அருமையாக செய்கிறார் கண்டிப்பாக என்னை பொறுத்தவரை வரும் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் இன்னும் அவர் அருமையாக விளையாடுவார் என நான் எதிர்பார்க்கிறேன்’ என பிரக்யான் ஓஜா தெரிவித்துள்ளார்.

மேலும் கடைசியாக நடந்து முடிந்த டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஏற்கனவே இரண்டு போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது இதன் மூலம்  இந்த டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் உள்ளது. அடுத்ததாக 4- வது டி20 கிரிக்கெட் போட்டி வரும் ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk

Recent Posts

ரூ. 500-க்கு கிடைக்கும் கியாஸ் சிலிண்டர் பற்றி தெரியுமா?

இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…

2 hours ago

இந்திய புழக்கத்தில் ரூ. 10,000 நோட்டு.. இந்த விஷயம் தெரியுமா?

இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…

2 hours ago

முதலமைச்சர் பதிவி ராஜினாமா…சித்தராமையா போட்ட கண்டீஷன்?…

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…

5 hours ago

தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம்…காட்டாட்சி என விமர்சனம்…

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…

6 hours ago

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

6 hours ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

7 hours ago