Cricket
17 ரன்வரை பொறுமையா இருந்தேன்! பிறகு அதிரடி தான்…நிக்கலஸ் பூரன் பேச்சு!
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 152 ரண்கள் எடுத்தது, அடுத்ததாக 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. முதல் போட்டியை போல இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி தோல்வியை அடைந்துள்ளது.
இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி அரை சதம் விலகிய நிக்கலஸ் பூரன் போட்டி முடிந்த பிறகு நெகிழ்ச்சியுடன் பேசினார். இது குறித்து பேசி அவர் “நான் இந்த போட்டியில் மிகவும் திருப்தியாக விளையாடினேன் என்று உணர்கிறேன். கடந்த சில போட்டிகளாகவே நாங்கள் தோல்வி அடைந்து வந்த நிலையில் இந்த வெற்றி எங்களுக்கு அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெறவேண்டும் என்பதற்கான ஊக்கத்தை கொடுத்துள்ளது.
போட்டியில் பிச் மிகவும் அருமையாக இருந்த காரணத்தினால் என்னால் நன்றாக விளையாட முடிந்தது. 17 ரன்கள் அடிக்கும் வரை என்னுடைய மனநிலை நிதானமாக விளையாட வேண்டும் என்று தோன்றியது பிறகு 17 ரன்களை கடந்த பிறகு அதிரடியாக விளையாடினால் மட்டும்தான் ரன்களை குவிக்க முடியும் என்று அதிரடி ஆட்டத்தில் இறங்கினேன் என்னால் நன்றாகவும் விளையாட முடிந்தது. என்னைப் பொறுத்தவரை என்னுடைய ஸ்கோர் எனக்கு முக்கியமில்லை. அணியினுடைய ஸ்கோர் தான் மிகவும் முக்கியமானது .
இந்த போட்டியில் எந்த அளவிற்கு நான் அருமையாக விளையாடினேனோ அதே அளவிற்கு அடுத்ததாக வரும் போட்டிகளில் முழுவதுமாக நன்றாக விளையாடுவேன்” எனவும் நிக்கலஸ் பூரன் தெரிவித்துள்ளார். மேலும் நிக்கலஸ் பூரன் நடந்து முடிந்த மேஜர் லீக் தொடரில் மும்பை அணிக்காக விளையாடினார். இறுதிப் போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் விளாசி இருந்தார். அங்கு எப்படி அருமையாக விளையாடினாரா அதே அளவிற்கு இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்களும் அதே பார்மில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.