Categories: Cricket

சுப்மன் கில்லுக்கு 4 மார்க் தான் கொடுப்பேன்! பேட்டிங்கால் கடுப்பான ஜாகீர் கான்!

ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக விளையாடிய சுப்மன் கில்  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். இரண்டு போட்டிகளிலும் அவர் சுமாரான ஒரு ஆட்டத்தை தான் வெளிப்படுத்தி இருந்தார். குறிப்பாக ஒரு போட்டியில் 6 ரன்களும் மற்றோரு போட்டியில் இன்னும் குறைந்த ரன்களை மட்டுமே அடித்து இருந்தார். அணியில் பல வீரர்கள்  சதம், அரைசதம் என விளாசினார்கள்.

ஆனால், ஐபிஎல் சீசனில் நன்றாக பார்மில் இருந்த  சுப்மன் கில்  டெஸ்ட் தொடரில் சரியாக செயல்படாதது அதிருப்தியை  ஏற்படுத்தியுள்ளது. மேலும் சுப்மன் கில் பார்ம் குறித்து பல விரர்களும் பேசி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றியம் பேசி உள்ளார். இது குறித்து பேசிய அவர் “இந்த டெஸ்ட் தொடரில் விளையாடிய பல வீரர்களுக்கு நான் 10-ல் 5 மார்க்ககளுக்கு மேல் கொடுப்பேன்.

ஆனால் சுமாராக விளையாடிய சுப்மன் கில்லுக்கு  10 மார்கிற்கு 4 மார்க் மட்டுமே கொடுப்பேன். அவர் மீது நம்பிக்கை வைத்து இந்திய அணி அவரை 3-ஆவது ஆளாக களம் இறக்கியது. ஆனால் அவர் சரியாக விளையாடவில்லை. டெஸ்ட் போட்டிகளில் ஓபனிங் ஜோடி நன்றாக விளையாடினால் மட்டுமே கண்களை குவிக்க முடியும். அதைப்போல தான் மூன்றாவது இரங்கும் வீரர்களும் அந்த ஓப்பனிங்கில் கொடுத்த ரன்களை  தக்க வைத்து சிறிது நேரம் ஆட்டத்தில் நின்று ரன்களை குவிக்கவேண்டும்.

ஆனால் அதை சுப்மன் கில்  சரியாக செய்யவில்லை இதற்கு பிறகும் சுப்மன் கில்லுக்கு 3-ஆவதாக  இறங்க வாய்ப்பு கிடைத்தது என்றால் அந்த இடத்திற்கு தகுந்தவாறு விளையாடி கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். ரோஹித் ஷர்மா  ஜெயஸ்வால் இருவரும் இரண்டு போட்டிகளிலும் நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.  அதற்குப் பிறகு களமிறங்கிய சுப்மன் கில்  அவர்களுக்கு உதவவே இல்லை.

அந்த மாதிரி சமயத்தில் நீங்களும் கை கொடுத்தால் இந்திய அணிக்கு இன்னும் பக்க பலமாக இருக்கும். எனவே வரும் போட்டிகளில் நீங்கள் இன்னும் திறம்பட செயல்பட வேண்டும்” என ஜாகீர் கான் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சூப்பராக விளையாடிய சுப்மன் கில் டெஸ்ட்  மிகவும் மோசமாக விளையாடி உள்ள காரணத்தினால் அடுத்ததாக மீண்டும் ஒரு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி கம்பேக் கொடுக்க வேண்டும் என்று சூழ்நிலையில் இருக்கிறார் . மீண்டும் பழையபடி அதிரடியாக எப்போது  விளையாடி கம்பேக்  கொடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Web Desk

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago