Connect with us

Cricket

நான் வந்துகிட்டு இருக்கேன்! அனில் கும்ப்ளேவை ஓரம் கட்டி கபில் தேவை நெருங்கிய அஷ்வின்..மிரட்டல் சாதனை.!!

Published

on

இந்திய  கிரிக்கெட் அணியின் சுழற் பந்து வீச்சாளர்  ரவிச்சந்திரன் அஸ்வின் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு  எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டிகளில் விக்கெட்களை எடுத்து பல சாதனைகளை படைத்தது வருகிறார்.  குறிப்பாக முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில்  ஐந்து விக்கெட்களும் அடுத்த இரண்டாவது இன்னிங்ஸில் 7  விக்கெட்டுகளும் என மொத்தமாக ஒரே போட்டியில் 12 விக்கெட் எடுத்து சாதனை படைத்தார்.

அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேலும் ஒரு சாதனை படைத்து அனில் கும்ப்ளேவை ஓரம் கட்டி கபில் தேவை நெருங்கியுள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட்டும் இரண்டாவது  இன்னிங்ஸில் 2 விக்கெட்களையும் அஷ்வின் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

முதல் இடத்தில் கபில்தேவ் 89 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அவருக்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் அணில் கும்ப்ளே 74 விக்கெட்டுகளுடன் இருந்த நிலையில், நேற்று 3 விக்கெட்கள் வீழ்த்தி 75 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இன்னும் சில போட்டிகளில் அவர் கபில்தேவ்  சாதனையும் முறியடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும். இதுமட்டுமின்றி அஷ்வின் – ஜடேஜா இருவரும் சேர்ந்தும் ஒரு சாதனை படைத்துள்ளனர். அது என்னவென்றால் அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங்கின் புகழ்பெற்ற ஜோடிக்குப் பிறகு அஷ்வின் மற்றும் ஜடேஜா இணைந்து 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய ஜோடி என்ற பெருமையைப் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

google news