இந்திய கிரிக்கெட் அணியின் சுழற் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டிகளில் விக்கெட்களை எடுத்து பல சாதனைகளை படைத்தது வருகிறார். குறிப்பாக முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்களும் அடுத்த இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளும் என மொத்தமாக ஒரே போட்டியில் 12 விக்கெட் எடுத்து சாதனை படைத்தார்.
அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேலும் ஒரு சாதனை படைத்து அனில் கும்ப்ளேவை ஓரம் கட்டி கபில் தேவை நெருங்கியுள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட்டும் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்களையும் அஷ்வின் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
முதல் இடத்தில் கபில்தேவ் 89 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அவருக்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் அணில் கும்ப்ளே 74 விக்கெட்டுகளுடன் இருந்த நிலையில், நேற்று 3 விக்கெட்கள் வீழ்த்தி 75 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இன்னும் சில போட்டிகளில் அவர் கபில்தேவ் சாதனையும் முறியடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும். இதுமட்டுமின்றி அஷ்வின் – ஜடேஜா இருவரும் சேர்ந்தும் ஒரு சாதனை படைத்துள்ளனர். அது என்னவென்றால் அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங்கின் புகழ்பெற்ற ஜோடிக்குப் பிறகு அஷ்வின் மற்றும் ஜடேஜா இணைந்து 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய ஜோடி என்ற பெருமையைப் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…